தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

0
440

தமிழ் தேசியக் கூட் டமைப்பின் உள்ளூ ராட்சி மன்றத்தேர்த லுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வவுனியாவில் வெளி யிட்டு வைக்கப் பட்டது.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல்வேறு கொள்கைப்பிரகடனங்களை உள்ளடக்கிய 15 பக்கங்களை கொண்ட விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

மாவை சேனாதிராஜா எம்.பியினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனிடம் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இரா. சம்பந்தனினால் கட்சித்தலைவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், டெலோ அமைப்பின் செயலாளர் க. சிறிகாந்தா, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம், விந்தன் கனகரட்னம் உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.