கண்டியில் விபத்து: வேகக்கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் வாகனம் பல வாகனங்களுடன் மோதல், 23 பேர் காயம்

0
402

கண்டி – கலகெதர பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் வாகனம், மூன்று முச்சக்கரவண்டிகள், இரண்டு பஸ்கள் மற்றும் கெப் வாகனத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்தவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் எழுவர் பெண்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.