கிளிநொச்சியில் சிறுவன் மீது தாக்குதல்: சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைதாகி பிணையில் விடுதலை

0
418

கிளிநொச்சியில் சிறுவன் மீது தாக்குதல்: சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைதாகி பிணையில் விடுதலை

கிளிநொச்சி – கரடிப்போக்கு பகுதியில் சிறுவனொருவன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நால்வரும் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, தலா 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கரடிப்போக்கு சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் வைத்து சிறுவன் மீது கடந்த 23 ஆம் திகதி மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.