ஹட்டனில் அவமானத்தால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை !!!

0
583

தன்னுடன் களவாடிய சம்பவம் தொடர்பில் ஏனைய சக மாணவர்களையும் காட்டிக்கொடுத்தமையால் சக மாணவர்களின் பெற்றோரின் பேச்சுக்களை தாங்க முடியாத மாணவன் ஒருவர் அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபோட்சிலி தோட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவன் எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதான முத்துகுமார் பிரசாந்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருதாவது,

பாடசாலையில் களவாடிய சம்பவம் ஒன்றில் ஈடுப்பட்டதாக கூறப்படும் மாணவன் தொடர்பாக அப்பிரதேசத்தில் அரசியல் பிரதிநிதி ஒருவரால் மாணவன் தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விசாரணையை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார் குறித்த மாணவனை விசாரித்த போது அம்மாணவன் மேலும் சில சகாக்களை பொலிஸாரிடம் காட்டிக்கொடுத்துள்ளார்.

இவ்வாறு குறித்த மாணவனால் காட்டப்பட்ட சகாக்களின் வீடுகளுக்கு சென்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதை அவ்வீட்டார்கள் ஆட்சேபித்து காட்டிக்கொடுத்த மாணவன் மீது சொற்பிரயோகங்களை மேற்கொண்ட நிலையில் குறித்த மாணவன் அவமானம் தாங்க முடியாததால், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பாடசாலையில் களவாடிய சம்பவம் தொடர்பாக குறித்த மாணவனை சகாக்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த சிலர் தகாத வார்த்தையில் பேசியமைக்காக வீட்டில் தனிமையில் இருந்த போதே குறித்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90-8-9இதேவேளை தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவன் அணிந்திருந்த ஆடையின் பையில் இருந்து மாணவன் தன் கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் சடலம் சட்ட வைத்திய விசாரணைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.