சகோதரனுடன் இருந்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு : கொலையா ? தற்கொலையா? என விசாரணை !

0
462

வவுனியா – கற்பகபுரம் பகுதியில் இன்று பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை குறித்த இளம் பெண்ணின் தாய், தந்தை இருவரும் சிதம்பரபுரம் உறவினர்களுடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

வீட்டில் சகோதரனுடன் இருந்துள்ள குறித்த பெண்ணிடம் சகோதரன் வெளியே சென்றுவிட்டு வருவதாகத் தெரிவித்துவிட்டுச் சென்று பிற்பகல் 1.30 மணியளவில் வீட்டிற்குச் சென்றபோது சமையறையில் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

தூக்கில் தொங்கிய சகோதரியை சகோதரன் அயலவர்களின் உதவியுடன் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் வவுனியா – கற்பகபுரம் பகுதியில் 5ஆம் ஒழுங்கையில் வசித்து வந்த 21 வயதான அர்ச்சுனன் கோகிலவதனி ஆவார்.

பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டதோடு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தையும் பார்வையிட்டுள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து குறித்த பெண்ணின் தற்கொலை சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகவும் குறித்த சம்பவம் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பூவரசங்குளத்துப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.