பதுளை தமிழ் அதிபர் விவகாரம் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

0
432

மாலைவரை தொடர்ந்தது; கண்ணீர் மல்கினார் அதிபர்
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவா னியை முழந்தாளிடச் செய்து மன்னிப்பு கோரச் செய்தமை, அச்சம்பவம் தொடர்பில் பொய்யான வாக்குமூலத்தை வழங்க அச்சுறுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று விசேட விசாரணைகளை நடத்தியது.

கொழும்பு 4, அர்.ஏ.டி.மெல் மாவத்தையில் உள்ள தலைமையகத்தில் வைத்து இந்த விசாரணைகளை ஆணைக் குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழு முன்னெடுத்தது. இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஊவா கல்விச் செயலர் உள்ளிட்ட 5 பேர், முறைப்பாட்டாளர்களான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோரிடமும் பாதிக்கப்ப்ட்ட அதிபர் ஆர்.பவானியிடமும் வாக்கு மூலங்கள் பெறப்பட்டு இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

காலை 10.15 மணிக்கு ஆரம்பமான இந்த விசாரணைகள் மாலை 5.45 மணியை தாண்டியும் தொடர்ந்தது.

இந்த விவகாரம் குறித்த விசாரணைகளுக்கு நேற்று காலை 10.00 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் ஆஜராகுமாறு, ஊவா மாகாண கல்விச் செயலாளர் சந்தியா அம்பன்வெல மாகாண கல்விப் பணிப்பாளர் ரத்நாயக்க, வலய கல்விப் பணிப்பாளர் ரணசிங்க, பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாகாண சபை ஊழியர்களான பாலித்த ஆரியவங்ச, பிரசன்ன பத்மசிரி, அமில கிரிஷாந்த ரத்நாயக்க ஆகியோருக்கே விசாரணைகளுக்கு ஆஜராக அறிவித்தல் அனுப்பட்டிருந்தது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தவிர்ந்த ஏனைய சந்தேக நபர்கள் மனித உரிமை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகினர்.

எச்.ஆர்.சி./236/18 எனும் முறைப்பாட்டு இலக்கத்துக்கு அமைவாக விடுக்கப்பட்டிருந்த அறிவித்தல் அமைவாக அவர்கள் ஆஜராகியிருந்தனர்.

இதனைவிட விசாரணைகளுக்கு அழைக்கப்பட்ட மேற்படி நபர்களுக்கு மேலதிகமாக முறைப்பாட்டாளர்களான ஜோஸப் ஸ்டாலின் மற்றும் கீர்த்தி தென்னகோன் பாதிக்கப்பட்ட அதிபர் ஆர். பவானி ஆகியோரும் முற்பகல் 9.55 மணியாகும் போதும் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பிரசன்னமாகியிருந்தனர்.

ஊவா முதலமைச்சரும் மேலே பெயரிடப்பட்ட ஊவா கல்விச் செயலர் உள்ளிட்டோரும் செய்த செயல் கரணமாக அரசியலமைப்பின் 12(1) ஆவது அத்தியாயம் மற்றும் 13 ஆம் அத்தியாயம் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள மொழி மற்றும் கருத்து வெளிப்பாட்டு உரிமை, 10 ஆவது அத்தியாயம் ஊடாக உறுதி செய்யப்படும் மன அமைதி ஆகியன கடுமையாக மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மையபப்டுத்தி விசாரணைகள் முர்பகல் 10.15 மணிக்கு ஆரம்பாகின.

மதிய போசனத்துக்காக பிற்பகல் ஒரு மணிக்கு நிறுத்தப்பட்ட விசாரணைகள் மீளவும் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகி மாலைவரை தொடர்ந்தன.

இந்த விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட தரப்பான அதிபர் ஆர்.பவானி, தான் சந்தித்த இக்காட்டான நிலைமை குறித்து கண்ணீர் மல்க மனித உரிமை ஆணைக் குழுவில் பிரஸ்தாபித்ததாக ஆணைக் குழுவின் தகவல்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.