கல்லடி பாலத்திலிருந்து ஒருவர் குதித்ததாக வெளியான செய்தியால் பரபரப்பு!

0
470

மட்டக்களப்பு – கல்லடி பாலத்தில் இருந்து ஒருவர் குதித்தாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, கல்லடி இலங்கை மின்சாரசபை அலுவலகத்தில் கடமையாற்றும் பொறியியலாளர் ஒருவரைக் காணவில்லையென காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த நபர் கல்லடி பாலத்தில் இருந்து நேற்று பிற்பகல் குதித்ததாக வெளியான தகவல்களையடுத்து அப் பகுதியில் பெருமளவான மக்கள் இன்றும் குவிந்துள்ளனர்.

Batti_-1__2_பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுமாறு வீட்டில் கடிதம் எழுதிவைத்துவிட்டு குறித்த பொறியியலாளர் வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாக வாதந்திகளே பரவிவருதாகவும், இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.