“நடிகை பாவனாவின் திருமணம் இன்று நடைபெற்றது! (படங்கள்)

0
535

பிரபல நடிகை பாவனாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. திருச்சூரில் நடைபெற்ற திருமணத்தில் காதலர் நவீனைக் கரம்பிடித்தார்.

கன்னட தயாரிப்பாளர் நவீனைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்துவந்தார் நடிகை பாவனா. நவம்பர் 2014-ல் இருவரும் திருமணம் செய்வதாக இருந்தது.

ஆனால் பாவனா தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டியிருந்ததால் கடந்த வருட மார்ச் மாதம்தான் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று, திருச்சூரில் உள்ள கோயிலில் நவீன் – பாவனா ஆகிய இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

மஞ்சு வாரியர், நவ்யா நாயர், பூர்ணா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள். இத்திருமணத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

bhavana122bhavana_wed4bhavana_wed1bhavana_wed2bhavana_wed3

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.