அமைச்சரவையில் வெடித்த பூகம்பம் – ரொபட் அன்­டனி (கட்டுரை)

0
335

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலை 9 மணி­ய­ளவில் வழ­மை­போன்று ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நடை­பெ­று­வ­தற்­கான ஏற்­பா­டுகள் பூர்த்­தி­யா­கி­யி­ருந்­தன.

அமைச்­சர்­களும் தமது அமைச்­ச­ரவை பத்­தி­ரங்­க­ளுடன் கூட்­டத்­துக்கு தயா­ராக இருந்தனர்.

சற்று நேரத்தில் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பூகம்பம் வெடிக்­கப்­போ­கின்­றது என்பதனை தெரி­யாமல் அமைச்­சர்கள் அமை­தி­யாக கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்­தனர்.

அமைச்­சர்கள் அனை­வரும் சமு­க­ம­ளித்­தி­ருந்த நிலையில் ஜனா­தி­பதி வரு­கை­தந்தார். ஜனா­தி­பதி வந்து சற்று நேரத்தில் அமைச்­ச­ர­வைக்­கூட்டம் ஆரம்­ப­மா­னது.

ஆனால் வழ­மை­போ­லல்­லாமல் அன்­றைய தினம் ஜனா­தி­ப­தியின் முகத்தில் சற்று அதிருப்தி குடி­கொண்­டி­ருந்­தது.

கூட்டம் ஆரம்­ப­மா­னதும் ஜனா­தி­பதி அமைச்­சர்­களின் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரங்கள் தொடர்பில் கேட்பார் என எதிர்­பார்க்­கப்­பட்­ட­போதும் ஜனா­தி­பதி திடீ­ரென உணர்வுபூர்வமான உரை­யொன்றை நிகழ்த்த தயா­ரானார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட எவரும் ஜனா­தி­பதி இவ்­வாறு சற்று அதி­ருப்­தி­யு­டனும் விச­னத்­து­டனும் உரை­யாற்­றுவார் என எதிர்­பார்க்­க­வில்லை. ஜனா­தி­பதி மிகவும் அதி­ருப்­தி­யுடன் தனது உரையை ஆரம்­பித்தார்.

அமைச்­சர்­களும் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரங்­களை ஒரு­பக்கம் வைத்­து­விட்டு ஜனாதிபதியின் உரையை செவி­ம­டுக்க ஆரம்­பித்­தனர்.

ஜனா­தி­பதி மிகவும் உருக்­க­மான முறையில் கருத்து வெளி­யிட்டார். ஜனா­தி­பதி ஆற்­றிய 25 நிமிட உரையின் சுருக்கம் இதுதான் ” ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியின் இளம்­ பா­ரா­ளு­மன்­ற­ உ­றுப்­பி­னர்­கள்­ என்­ மீது கடும் விமர்­ச­னங்­க­ளை­ முன்­வைத்­து­வ­ரு­கின்­றனர்.

நான் ஊழ­லுக்­கு­ எ­தி­ராக செயற்­பட்­டு­வ­ரு­கின்றேன். அவ்­வாறு நான்­ ஊ­ழல்­வா­தி­க­ளுக்­கு­ எ­தி­ராக பேசும்­போ­தும் ­செ­யற்­ப­டும்­போ­து­ ஐக்­கி­ய ­தே­சி­ய­கட்­சி­யி­னர் அ­வற்றை தம­து ­உட­லில் ­ஏன்­போட்­டுக்­கொள்­ள­வேண்டும்?

ஐக்­கிய தேசி­ய­கட்­சி­யின்­ முக்­கி­ய இ­ளம் ­அ­மைச்­சர்­ ஒ­ருவர் ஏன் என­து­குற்றச்சாட்டுக்களுக்­கா­க ­தொப்­பி­யை­  அ­ணிந்­து­கொள்­ள­வேண்டும்?

அப்­ப­டி­யானால் நான்­ ஊ­ழல்­க­ளுக்­கு ­எ­தி­ரா­க­ ந­ட­வ­டிக்­கை­ எ­டுக்­கக்­கூ­டாதா? அத­னையா நீங்­கள்­ கூ­று­கின்­றீர்கள்?

நான் ஊழல்­க­ளுக்­கு­ எ­தி­ரா­க ­ந­ட­வ­டிக்­கை­ எ­டுப்­ப­தற்­கே­  வந்­தி­ருக்­கின்றேன். அதற்காகவே மக்­கள்­ என்­னை­ தெ­ரி­வு­செய்­தனர்.

அவ்­வாறு ஊழ­லுக்­கு­ எ­தி­ரா­க­செ­யற்­ப­டும்­போது ஐக்­கி­ய­ தே­சி­ய­  கட்­சியின் இளம்­பா­ரா­ளு­மன்­ற­ உ­றுப்­பி­னர்­கள் ஏன் அவற்றை தம­து ­உ­ட­லில்­  போட்­டுக்­கொள்­ள­வேண்டும்? நான் பொலன்­ன­று­வை­யி­லி­ருந்­து­ அ­ர­சி­யலை ஆரம்­பித்­தவன். மிகவும் கஷ்­டப்­பட்­டுத்­தான்­ இந்­த­ இ­டத்­துக்­கு­வந்­துள்ளேன்.

நான் நன்றி இல்­லா­த­வன் ­கி­டை­யாது. நான் ஜனா­தி­ப­தி­யின்­ அ­தி­கா­ரங்­களை பிர­த­ம­ருக்­கு­வ­ழங்­கி­யி­ருக்­கின்றேன்.

பிர­தமர் நேர­டி­யாக தலை­யிட்டு முன்­னெ­டுக்­கும்­ எந்­த­வொ­ரு ­வி­ட­யம்­கு­றித்­தும் நான் தலை­யிட்­ட­து ­கி­டை­யாது.

பிர­த­மரும் அந்­த­ அ­தி­கா­ரங்­களை சரி­யா­க­ கை­யாண்­டு­ வந்­துள்ளார். மத்­திய வங்கி விவ­கா­ரத்தை யார்­ மீ­தும்­தாக்­குதல் நடத்த பயன்­ப­டுத்த இட­ம­ளிக்­க­மாட்டேன்.

ஆனால் ஐக்­கி­ய­ தே­சி­ய­ கட்­சிஎம்.பி. க்கள் தொடர்ச்­சி­யா­க­ என்­மீது தாக்­கு­தல்­ ந­டத்­தி­வ­ரு­கின்­றனர்” இவ்­வாறு ஜனா­தி­பதி மிகவும் அதி­ருப்­தி­யு­டனும் விச­னத்­து­டனும் உருக்­கமா­ன முறை­யிலும் உரை­யாற்­றி­யி­ருந்தார்.

ஜனா­தி­பதி இவ்­வாறு திடீ­ரென ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் உறுப்­பி­னர்­களைத் தாக்கி உரை­யாற்­றுவார் என எவரும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.

ஜனா­தி­பதி உரை­யாற்றி முடிந்­ததும் அடுத்த கட்ட பணி­க­ளுக்கு செல்வார் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதும் அவர் உட­ன­டி­யாக ஆச­னத்­தி­லி­ருந்து எழுந்து அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­விட்டார்.

இதனை சற்றும் எதிர்­பார்க்­காத பிர­த­மரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சிரேஷ்ட அமைச்­சர்­களும் உட­ன­டி­யாக ஜனா­தி­ப­தியின் பின்னால் சென்று அவரை சமா­தா­னப்­ப­டுத்த முயற்­சித்­தனர்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் சமா­தான முயற்­சியின் பய­னாக சுமார் ஒரு மணி­நே­ரத்தின் பின்னர் ஜனா­தி­பதி பிர­த­ம­ருடன் மீண்டும் அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்­திற்கு வருகை தந்தார்.
ranil

ஜனா­தி­பதி மீண்டும் அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்­திற்கு வருகை தந்­ததும் பிர­தமர் முக்­கி­ய­மான உரை­யொன்றை நிகழ்த்­தினார்.

பிர­தமர் குறிப்­பி­டு­கையில் இது நல்­லாட்சி அர­சாங்­க­மாகும். இங்கு இரண்டு பிர­தான கட்­சிகள் இணைந்து ஆட்சி அமைத்­தி­ருக்­கின்­றன.

அதனைப் பாது­காத்து சரி­யான முறையில் கொண்டு செல்­வது எமது எல்­லோ­ரதும் கட­மை­யாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நாமே கொண்­டு­வந்தோம்.

எனவே அவரை பாது­காக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும் என்று குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

அது­மட்­டு­மன்றி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்­று­மொரு முக்­கி­ய­மான அறி­விப்­பையும் வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.

அதா­வது கடந்த சில தினங்­க­ளாக ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மீது முன்­வைத்த விமர்­ச­னங்­களை மீளப்­பெ­று­வ­தாக பிர­தமர் அறி­வித்­தி­ருக்­கின்றார்.

இதன்­மூலம் கடும் அதி­ருப்­தியில் இருந்த ஜனா­தி­ப­தியை ஒரு­வாறு சகஜ நிலைக்கு கொண்­டு­வந்­தி­ருக்­கின்றார்.

இதன்­மூலம் தேசிய அர­சாங்­கத்தில் இடம்­பெ­று­கின்ற ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டை­யி­லான பிரச்­சி­னைகள் உச்­ச­க் கட்­டத்தை உண­ர­ மு­டி­கின்­றது.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது ஏற்­பட்ட பிரச்­சி­னையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சமா­ளித்­தி­ருந்­தாலும் இது எத்­த­னை­கா­லத்­திற்கு நீடிக்கும் என்­பது பாரிய கேள்விக்­கு­றி­யா­கவே காணப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்­டு­செல்ல எவ்­வ­ள­வுதான் முயற்­சித்­தாலும் தற்­போ­தைய நிலை­மை­களை பார்க்­கும்­போது அந்த முயற்சி தொடர்ந்து பலிக்­குமா என்­பது சந்­தே­க­மா­கி­றது.

மேலும் மறுநாள் இது தொடர்பில் அமைச்­ச­ரவை பேச்­சா­ளர்கள் கூறிய கருத்­துக்­களும் பல்­வேறு விட­யங்­களை உணர்த்­துவ­தா­கவே அமைந்­தன.

அதா­வது ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வைக்கு உப­தேசம் வழங்­கிய பின்னர் இயற்கை தேவையை நிறை­வேற்­றவே வெளியில் சென்றார் எனவும் அவர் கோபித்­துக்­கொண்டு செல்­ல­வில்லை என்றும் அமைச்­ச­ரவை பேச்­சா­ளர்கள் இரு­வரும் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

ஆனால் புதன்­கி­ழமை மாலை காலிப்­ப­கு­தியில் நடை­பெற்ற கூட்­டம் ஒன்றில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு கூறி­யி­ருந்தார்.

“” நான் அமைச்­ச­ரவை கூட்­டத்தில் அமைச்­சர்­க­ளுக்கு ஒரு உத்­தே­சத்தை வழங்­கினேன். . தவறு செய்த எவரும் எங்கும் ஒளிந்­து­விட முடி­யாது. அது தொடர்­பா­கவே நான் 35 நிமி­டங்கள் உப­தேசம் வழங்­கினேன்.

இவ்­வாறு அர­சாங்­கத்தை நடத்த முடி­யுமா என்­பது குறித்து தீர்­மானம் ஒன்றை எடுக்­கு­மாறு கூறி­விட்டு நான் தேநீர் ஒன்று குடிக்க சென்­று­விட்டேன் .

மீண்டும் வரு­வ­தாக கூறியே தேநீர் குடிக்க சென்றேன். அதன் பின்னர் நான் வந்து அமைச்­ச­ரவை பணி­களை முன்­னெ­டுத்தேன்””

அந்­த­வ­கையில் அமைச்­ச­ரவை பேச்­சா­ளர்கள் இயற்கை தேவையை நிறை­வேற்ற ஜனா­தி­பதி வெளியே சென்­ற­தாக கூறிய நிலையில் ஜனா­தி­ப­தியே இல்லை தான் தேநீர் அருந்­தவே அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லி­ருந்து வெளியே சென்­ற­தாக கூறி­யுள்ளார்.

எது எப்­ப­டியோ தேசிய அர­சாங்­கத்­துக்குள் பூகம்பம் வெடித்­துள்­ளது என்­ப­தனை புரிந்­து­கொள்ள முடி­கின்­றது.

கடந்த சில மாதங்­க­ளா­கவே இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டு­களும் நெருக்­க­டி­களும் வெளிச்­சத்­திற்கு வரத்­தொ­டங்­கின இரண்டு தரப்­பி­னரும் பகி­ரங்­க­மாக ஒரு­வரை ஒரு­வரை விமர்­சித்து வந்­தனர்.

அதா­வது மத்­திய வங்கி பிணை­முறி விசா­ரணை அறிக்­கை­யா­னது கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் குறித்த ஆணைக்­குழு உறுப்­பி­னர்­க­ளினால் கைய­ளிக்­கப்­பட்­டது.

அத­னை­ய­டுத்து அந்த அறிக்­கையை முழு­மை­யாக வாசித்த ஜனா­தி­பதி அது தொடர்­பாக தனது நிலைப்­பாட்டை அறி­வித்­த­த­துடன் அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு ஒரு சிலருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து பிர­தான கட்­சிகள் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்றம் கூட்­டப்­பட்டு இது தொடர்பில் விவா­திக்­கப்­ப­ட­வேண்­டு­மென விடுத்த கோரி்க்­கைக்கு அமைய விசேட பாரா­ளு­மன்ற அமர்வு நடை­பெற்­ற­துடன் அதில் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னரும் கூட்டு எதி­ர­ணி­யி­னரும் கைக­லப்பில் ஈடு­பட்­டனர்.

அந்த சந்­தர்ப்­பத்தில் அநு­ரா­த­பு­ரத்தில் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தில் திரு­டர்கள் சண்டை போடு­வ­தாக கூறி­யி­ருந்தார். இந்­தக்­கூற்று ஐக்­கிய தேசி­யக்­கட்சி உறுப்­பி­னர்கள் மத்­தியில் கடும் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

இத­னை­ய­டுத்தே ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்கும் இடை­யி­லான முறுகல் வலு­வ­டைந்­தது. இரண்டு தரப்­பி­னரும் பகி­ரங்­க­மாக விமர்­சிக்க ஆரம்­பித்­தனர்.

அது­மட்­டு­மன்றி ஐக்­கிய தேசிய கட்­சியின் பின்­வ­ரிசை எம்.பி. க்கள் ஜனா­தி­ப­தியை கடு­மை­யாக விமர்­சிக்க ஆரம்­பித்­தனர்.

குறிப்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மரிக்கார் , சுஜீவ சேன­சிங்க மற்றும் ஹரீன் பெர்­னாண்டோ ஆகியோர் ஜனா­தி­பதி மீது கடும் விமர்­ச­னங்­களை முன்­வைக்க ஆரம்­பித்­தனர்.

அது­மட்­டு­மன்றி அறிக்கை­யொன்றை வெளி­யிட்­டி­ருந்த ஐக்­கிய தேசி­யக்­கட்சி பாராளுமன்ற உறுப்­பினர் மரிக்கார் கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்தார்.

அதா­வது மஹிந்த ராஜபக் ஷவிடம் அப்பம் உண்­டு­விட்டு இறு­தியில் மஹிந்­த­விற்கே துரோகம் செய்­த­தைப்­போல எமது வாக்கில் ஜனா­தி­பதி ஆகி­விட்டு எமக்கே முதுகில் குத்­தலாம் என்ற எண்­ணத்தில் ஜனா­தி­பதி உள்ளார் .

ஜனா­தி­பதி எங்­களை கள்ளர் என கூறு­கின்றார். நாங்கள் திரு­டர்கள் தான், ஆனால் மஹிந்த ராஜபக் ஷவின் பையில் இருந்து கள­வெ­டுத்து வெளி­யே­றி­யவர் தான் இன்று ஜனா­தி­பதி ஆச­னத்தில் அமர்ந்­துள்ளார் என்று மரிக்கார் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அத்­துடன் ஜனா­தி­ப­தியை பிட்­பொக்கட் காரர் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். மரிக்­காரின் சொற்­பி­ர­யோ­கமே ஜனா­தி­ப­தியை விச­ன­ம­டைய வைத்­தது.

பின்னர் இது தொடர்பில் பிர­தமர் ரணில் மரிக்கார் எம்.பி. க்கு ஜனா திப­தி­யிடம் மன்­னிப்பு கோரு­மாறு அறி­வுரை வழங்­கி­யி­ருந்தார் என்றும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் இரா­ஜாங்க அமைச்சர் சுஜீவ சேன­சிங்­கவும் ஜனா­தி­பதி மீது விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்தார். இவ்­வாறு ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­வைத்த விமர்­ச­னங்கள் ஜனா­தி­ப­தியை விச­ன­ம­டைய செய்­தி­ருக்­கின்­றது. அதன் வெளிப்­பா­டா­கவே அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி அதி­ருப்­தி­யுடன் உரை­யாற்­றி­யி­ருக்­கின்றார்.

இந்­நி­லையில் தேசிய அரசாங்கத்தின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிகின்றது.

ஆனால் இவ்வாறு எவ்வளவு காலத்திற்கு பிரதமரினால் தனது கட்சி உறுப்பினர்களை கட்டிப்போட முடியும் என்பது கேள்விக்குறியாகும். காரணம் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் பிரதமரை விமர்சிக்கும் போது ஏன் எங்களால் ஜனாதிபதியை விமர்சிக்க முடியாது என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.

உண்மையில் தேசிய அரசாங்கம் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் பிரதமரை விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தில் சற்று அடக்கி வாசித்து என்றே கூறவேண்டும்.

எவ்வாறெனினும் தற்போது பிரச்சினை பூதாகரமாகியிருப்பதை உணரமுடிகின்றது. அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெற்ற இந்த அரசியல் பூகம்பத்தை வெறுமனே எடுத்துவிட முடியாது.

அது எதிர்காலத்தில் இரண்டு கட்சிகளுக்குமிடையில் இடம்பெறப்போகின்ற மிகப்பெரிய மோதல்களுக்கு உதாரணமாக காணப்படுகின்றது.

எதிர்வரும் வாரங்களில் அரசியல் மேலும் சூடுபிடிக்கப்போகின்றது. அரசியல் எதுவும் நடக்கலாம். என்ன நடக்கின்றது என்று பார்ப்போம்.

ரொபட் அன்­டனி

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.