“புடவை அணிந்து மாரத்தானில் ஓடி கின்னஸ் சாதனை செய்த பெண்!!

0
474

நம்மில் பலர் புடவை கட்ட சலித்துக் கொள்வோம். சல்வார், ஜீன்ஸ், லெஹங்கா, குர்தி, எத்னிக் மற்றும் வெஸ்டர்ன் உடைகளின் பக்கம் நமது கவனம் திசைமாறிவிட்டது.

பள்ளி அல்லது கல்லூரி ஃபேர்வெல் தினங்களில் புடவை கட்டும் பழக்கம் இருந்துவருகிறது. பண்டிகைகள், குடும்ப விழாக்கள், குலதெய்வ வழிபாடு, கோவில், திருமணம் மற்றும் விவேஷ தினங்களில் மட்டும் சேலை அணிகிறார்கள் இன்றைய யுவதிகள்.

சேலை கட்டுவது என்றாலே தெறித்து ஓடுவோம் நாம். ஆனால் அந்த சேலையைக் கட்டிக் கொண்டு ஜெயித்து காண்பித்துள்ளார் ஒரு பெண்மணி.

இன்றைய அவசர யுகத்தில் பலர் ஒதுக்கி வைத்த சேலையைக் கட்டிக் கொண்டு ஒருவர் சாதித்துள்ளார் என்பது ஆச்சரியம்தானே. அப்படி என்ன சாதனை? யார் அவர்?

img_3-1

ஒன்பது கஜம் புடவையைக் கட்டிக் கொண்டு மாரத்தான் போட்டியில் கலந்து குறைந்த நேரத்தில் ஓடி வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜெயந்தி சம்பத்குமார்.

இவர் பி.டெக் எம் எஸ் கம்யூட்டர் சயின்ஸ் படித்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பிரின்ஸிபால் மேனேஜராக பணி புரிகிறார்.

Jayanthi Sampathkumar 1

எப்படி இது சாத்தியமானது என்று அவர் கூறினார் ‘எனக்கு கைத்தறி புடவைகள் ரொம்ப பிடிக்கும். விதம் விதமாக வாங்குவேன்.

என்னுடைய அலமாரியில் பல ஊர்களிலிருந்து வாங்கிச் சேகரித்த அழகு டிசைன்களில் பலவிதமான கைத்தறி சேலைகள் உண்டு.

எந்த ஊருக்குப் போனாலும் கட்டாயம் ஒரு நல்ல சேலை வாங்கிட்டு வருவேன். ஆனால் அவற்றை உடுத்துச் செல்ல நேரமில்லாமல் அப்படியே இருந்து வந்தது.

அப்படி ஒரு சமயத்தில் இவ்வளவு சேலையை வாங்கி வைச்சிருக்கே இதெல்லாம் கப்போர்ட் தான் கட்டுது என்று கிண்டல் செய்தார் என் கணவர்.

அது உண்மைதான் என்று எனக்குத் தோன்றியது அன்றிலிருந்து வாங்கிய சேலைகளை கட்டிக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தேன்.

தினமும் அலுவலகத்துக்கு கைத்தறி புடவையில் செல்லத் தொடங்கினேன். ஸ்பெஷல் தருணங்களில் மட்டும் மற்ற வகைகளில் சேலை என புடவை என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்க ஆரம்பித்தது.

அந்நிலையில் கடந்த ஆண்டு, ஜனவரி 2017 புத்தாண்டில் ஒரு புதிய இலக்கை எனக்கு நிர்ணயித்துக் கொண்டேன்.

இதற்கு முன் 5 கிமீ, 10 கிமீ மற்றும் 21 கிமீ மாரத்தான் ஓடியிருக்கிறேன். இந்த முறை  42 கிலோ மீட்டர் ஓட முடிவு செய்தேன். அதுவும் எனக்கு பிடித்தமான புடவையில்.

Fastest marathon dressed in a sari HEADER_tcm25-499934

புடவை கட்டிக் கொண்டு நடப்பதே பெரிய விஷயம் இதில் ஓடுவது எப்படி என்று நினைக்க வேண்டாம். மனம் இருந்தால் மார்க்கமுண்டு.

புடவை கட்டறது குறைஞ்சிருச்சுன்னா ஏற்கனவே நலிவடைந்து வரும் நெசவாளர்களோட நிலைமை மேலும் மோசமாகும். கைத்தறி புடவைகளுக்கு தனி அழகும் சிறப்பும் இருக்கு.

எனவே தான், இந்த மாரத்தானில் புடவையை கட்டிட்டு ஓடி அதன் மகத்துவத்தை புரிய வைக்கணும்னு முடிவு செஞ்சேன்.

சொல்லிட்டேனே தவிர அதை எப்படி சாத்தியப்படுத்தறதுன்னு ரொம்பவே குழப்பம். ஒவ்வொரு ஊர் ஸ்டைல்ல புடவையைக் கட்டிப் பார்த்து முயற்சி செய்தப்போ, அது செளகரியமாக இல்லை.

அதுக்கப்பறம்தான் மடிசார் கட்டிக் கொள்ளலாம், ஒன்பது கஜம் உள்ள புடவை சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன். நான் தற்போது ஹைதராபாத்தில் இருந்தாலும் எனக்கு சொந்த ஊர் சென்னை தான்.

ntd_running_42km_long_marathon_in_sari

அதன் பிறகு தினமும் காலை 5 மணிக்கு புடவை கட்டிட்டு பயிற்சியை தொடங்குவேன். மாரத்தான் போட்டில கலந்துக்க இன்னொரு முக்கியமான விஷயம், ஷூ. ஆனால் இப்படி புடவை கட்டிட்டு ஷூ போட்டு ஓடறது சரியா இருக்காதுன்னு அதை தவிர்த்தேன். ஹீல்ஸ் இல்லாத சாதாரணமா செருப்பு போட்டுக்கிட்டு இந்த போட்டில கலந்துக்கிட்டேன்.

IMG_7415

போட்டி தொடங்கியதும் ஒன்பது கஜப் புடவையைக் கட்டிட்டு நான் ஓடினப்போ, நிறைய பேர் ஆச்சரியமா பார்த்தாங்க.

இது மாதிரி மாரத்தான் போட்டிகள்ல இதுக்கு முன்னாடி இந்தியா அளவில மூன்று பெண்கள் தான் ஜெயிச்சிருக்காங்க. ஆனால் இதுவரை யாரும் புடவை கட்டி ஓடினதில்லை.

இந்தக் காரணத்தால் என் முயற்சியை கின்னஸ் சாதனையில் இடம்பெறச் செய்யலாம்னு முடிவெடுத்தோம்.

எனக்கு பயிற்சி அளித்த கோச் விக்னனுக்கு நன்றி சொல்லணும். நான் மாரத்தான்ல ஓடினப்ப அவர் சைக்கிள்ள தொடர்ந்து வந்து தண்ணீர், க்ளூகோஸ் தந்தார்.

இந்த மாரத்தானை நண்பர் தர்மா வீடியோ பதிவு செய்திருக்கார். என்னோட இந்த முயற்சிக்கு வீட்டுல முழு சப்போர்ட் கிடைச்சது ரொம்ப சந்தோஷமான விஷயம்.

fastest marathon in a sari_tcm25-499935குறைந்த நேரத்தில் (4 மணி நேரம் 57 நிமிடங்கள், 44 நொடிகளில்) புடவையில் முழு மாரத்தான் ஓடி ஜெயிச்சது மறக்க முடியாது தருணம்.

Run_Web-750x500.jpg.pagespeed.ce.8qZlb93TfZஇந்த வெற்றியின் மூலம் நான் சொல்ல விரும்பறது ஒண்ணுதான் நம்முடைய பாரம்பரியத்தை மதிக்கும் விதமாக ‘புடவையைக் கொண்டாடுவோம். நெசவாளர்களுக்கு வாழ்வளிப்போம்!’ என்றார் இந்த மாரத்தான் ராணி ஜெயந்தி சம்பத்குமார்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.