கார் விபத்தில் சிக்கிய மகன்: ஹெலிகாப்டரில் சென்று மீட்ட தந்தை

0
1166

ஆஸ்திரேலியாவில் கார் விபத்து நடந்த பின்னர், தன்னுடைய மகனை ஹெலிகப்டரில் தேடுவதற்கு தந்தை எடுத்த முடிவு, அவரது மகனை உயிரோடு மீட்பதற்கு உதவியுள்ளது.

TELEMMGLPICT000151434478_trans_NvBQzQNjv4BqDJrK9BUH0W0Odu12g5EGRgpocUVpJFKFy0E268HFR8QAustralian teen Samuel Lethbridge

ஞாயிற்றுக்கிழமை 17 வயதான சாமுவேல் லெத்பிரிட்ஜின் கார் நியூ சௌத் வேல்ஸ் நெடுஞ்சாலையை விட்டு கடந்து விபத்தில் சிக்கியது. காரில் மாட்டிக்கொண்ட அவர் 30 மணிநேரம் காரில் காருக்குள்ளேயே இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அன்றய தினம் அவர் தமது நண்பரின் வீட்டிற்கு சென்றடையாததால், குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

TELEMMGLPICT000151415113_trans_NvBQzQNjv4BqEDjTm7JpzhSGR1_8ApEWQA1vLvhkMtVb21dMmpQBfEs“சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர்” உள்ளூரில் நடைபெற்ற கார் விபத்து ஒன்றை நினைவுகூர்ந்தவுடன் அவரது தந்தை டோனி லெத்பிரிட்ஜ் ஹெலிகட்பர் ஒன்றை வாடகைக்கு எடுக்க முடிவு செய்தார்.

” ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில், துரதிஷ்டவசமாக, 5 நாட்கள் யாரும் கண்டுபிடிக்காததால். அந்த மனிதர் இறந்துவிட்டார்.

சாமுவேலுக்கு அவ்வாறு நிகழ நான் விடப்போவதில்லை என்று “சவன்” என்ற உள்ளூர் சேனலிடம் அவர் தெரிவித்தார்.

மகன் காணாமல் போய்விட்டது, அவனுடைய வழக்கத்துக்கு மாறானது என்பதால், அவன் சிக்கலில் இருப்பதாக டோனி லெத்பிரிட்ஜ்க்கு சந்தேகம் எழுந்துள்ளது.

TELEMMGLPICT000151416915_trans_NvBQzQNjv4BqQgU7do4DKJa37l2rQGhYsH6dqKSUeGboYpAFEv-LaIkd80b2f156fd13372f477d0ed6c01e11b9e38435a4e832c769abe3293c57d43ba

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.