டைமிங் இல்லனா கவுண்டமணிக்கு பிடிக்காது – மனம் திறந்து பேசிய செந்தில்- (வீடியோ)

0
218

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செந்தில் கவுண்டமணியின் டைமிங் குறித்து மனம் திறந்து பேசினார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. நவரச நாயகன் கார்த்திக், நந்தா, செந்தில், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமைய்யா, சரண்யா பொன்வண்ணன், ஆர்.ஜே.பாலாஜி, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் உலகமெங்கும் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செந்தில், தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

இந்த பொங்கல் பண்டிகை இனிப்புடன் இனிதே ஆரம்பமாகட்டும் என்று பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

201801131116065722_1_TSK-Senthil2._L_styvpfதானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் வந்ததில் மகிழ்ச்சி. இந்த இளைஞர் பட்டாளத்தில் நானும் ஒருவனாக நடித்ததில் நானும் இளமையாகவே உணர்ந்தேன்.

வைதேகி காத்திருந்தால் படத்தில் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா என்று காமெடி இடம்பெற்றிருக்கும்.

அதே போல தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் ஒரு காட்சியில் அதை ஞாபகப்படுத்தும்படியான ஒரு காமெடி இடம்பெற்றிருக்கிறது. கண்டிப்பாக அதை அனைவரும் ரசிப்பார்கள் என நம்புகிறேன். அந்த காலத்து காமெடிக்கும் இந்த காலத்து காமெடிக்கும் நிறைய மாறுபாடு இருக்கிறது.

தற்போது இணையத்தில் மீம்ஸ் நிறைய வருகிறது. அதில் நாங்கள் நடித்த படத்தின் காமெடியை வைத்த அரசியல்வாதிகளை பயங்கரமாக கலாய்த்து கலக்குகின்றனர். தப்பு செய்பவர்களை கேள்வி கேட்கும்படியான அந்த மீம்ஸ்களை பார்த்து ரசித்தேன்.

கவுண்டமணி நல்ல டைமிங் கலைஞர். சரியான டைமிங்கில் வசனம் பேசாவிட்டால் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

அவருடன் நடிக்கும் போது, சரியாக கவனமில்லை என்றால் யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார். அவருடன் சேர்ந்தால் நமக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் என்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.