கரும்பனியை கவனிக்காமல் சறுக்கி விழுந்த மனிதர்: வைரல் வீடியோ

0
736

அமெரிக்கா சாலையில் சென்ற ஒருவர், கடுமையான பனி காரணமாக, வெறும் காலில் சறுக்கியபடி சென்ற காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

அமெரிக்காவின் வர்ஜீனியா பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள சாலைகள் பனிக்கட்டினால் உறைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில், இந்தச் சாலை வழியாக சென்ற ஒருவர், பனிக்கட்டினால் உறைந்த தெருவில் சறுக்கியபடியே விழுந்து எழுந்து சென்ற வீடியோ தற்போது அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

வலைப்பக்கத்தில் இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்திற்குள்ளே மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மொத்த சாலையே கரும் பனியால் உறைந்திருக்கும் போது, அதை கவனிக்காமல் அந்த நபர் சென்றுள்ளார்.

உடனே தவறி விழுந்து, எழுந்து சறுக்கியபடியே தரையில் உருண்ட காட்சிகள் பார்பவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் பலரும் அதை பகிர்ந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.