`காதலி இறந்ததுகூடத் தெரியாமல் போதையிலிருக்கும் காதலன்!’ – சென்னை லாட்ஜில் நடந்த விபரீதம்

0
169

சென்னை லாட்ஜில் வெளிநாட்டு இளம்பெண் இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் தங்கியிருந்த காதலனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

பின்லாந்து நாட்டை எமிலியா என்ற இளம் பெண்ணும் அவரின் காதலன் அலக்ஸி ஜோயல் ஆகிய இருவரும் சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு வந்தனர்.

– சென்னை லாட்ஜில் நடந்த விபரீதம் l 1 17315இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்ற காதல் ஜோடி, நேற்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினர்.

இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது அறை திறக்கப்படவில்லை. இதனால் விடுதி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது, படுக்கையில் இருவரும் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. இதனால் விடுதி ஊழியர்கள் இருவரும் தூங்குவதாகக் கருதினர்.

மதியம் வரை அறை திறக்கப்படவில்லை. இதனால், விடுதி ஊழியர்கள் அறைக்குள் நுழைந்தனர். இருவரையும் எழுப்பினர். ஆனால், அவர்கள் கண்விழிக்கவில்லை.

l_1_17315அப்போது, எமிலியா, பிணமாகக் கிடப்பது தெரிந்தது. அலக்ஸி ஜோயல் மயக்கத்தில் இருப்பதும் கண்டறிந்த போலீஸார், அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். எமிலியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

l2_17446 காதலி இறந்ததுகூடத் தெரியாமல் போதையிலிருக்கும் காதலன்!’ – சென்னை லாட்ஜில் நடந்த விபரீதம் காதலி இறந்ததுகூடத் தெரியாமல் போதையிலிருக்கும் காதலன்!’ – சென்னை லாட்ஜில் நடந்த விபரீதம் l2 17446

l2_17446

மயக்கத்திலிருக்கும் காதலன் அலக்ஸி ஜோயல்

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “எமிலியாவும் அலக்ஸி ஜோயலும் காதலர்கள் என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது.

மயக்கத்திலிருக்கும் அலக்ஸி ஜோயல் கண்விழித்தால் மட்டுமே எமிலியாவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும். அலக்ஸி ஜோயலின் மயக்கத்துக்குப் போதை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்” என்றனர்.

விடுதி ஊழியர்களிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, எமிலியாவும் அலக்ஸி ஜோயலும் சேர்ந்தே நேற்றிரவு மது அருந்தினர்.

இரவு நீண்ட நேரம் அவர்கள் தங்கியிருந்த அறையில் லைட் எரிந்துகொண்டிருந்தது. எந்தவித சத்தமும் அறையிலிருந்து கேட்கவில்லை.

நேற்று காலையில் அறை எடுத்துத் தங்கிய அவர்களில் எமிலியா எப்படி இறந்தார் என்று தெரியவில்லை” என்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.