“அபுதாபியில் ரூ.20 கோடி லாட்டரி வென்ற இந்தியர் இவர்தான்”

0
873

 கேரளாவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருக்கு அபு தாபியில் ரூ.20 கோடி அளவுக்கு லாட்டரி சீட்டில் பரிசு விழுந்துள்ளது.

ஹரிகிருஷ்ணன் வி நாயர் (42) துபையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வணிக மேம்பாட்டு மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 2002ம் ஆண்டு முதல் துபையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு லாட்டரில் மிகப்பெரிய தொகை பரிசாகக் கிடைத்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், என்னால் இதனை நம்பவே முடியவில்லை. அது நானா? உண்மையிலேயே அது நான்தானா? என்று உற்சாகம் பொங்க குதூகலத்தில் இருக்கிறார் நாயர்.

இதற்கு முன்பும் இரண்டு முறை லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறேன். அப்போது பரிசு கிடைக்கவில்லை.

எனக்கு குடும்பத்தோடு உலகத்தை சுற்ற வேண்டும் என்று விருப்பம். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது என்கிறார்.

எனது மகனின் கல்வி குறித்து திட்டமிடப்போகிறேன். இந்தியாவில் இன்னொரு வீடு வாங்க வேண்டும்.

எனது பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோருக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.

இது குறித்து அவரது மனைவி கூறுகையில், இந்த தகவலை நான் நம்பவே இல்லை. என் கணவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்த போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

முதலில் அவர் என்னிடம் விளையாடுகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். அவரே ஒரு சிறந்த வணிக மேம்பாட்டு மேலாளர்.

எனவே இந்த பணத்தை எப்படி கையாள்வது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் என்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.