“உலகின் தீர்க்கப்படாத எண்ணற்ற புதிர்களில் ஒன்று இக்காட்சி!

0
1410

கம்யூனிஸ சீனாவின் நவீன வரலாற்றில் அழிக்கவியலாத கொடுந்துன்பியல் சம்பவமாகப் பதிந்துள்ளது சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 1987-ம் ஆண்டு நிகழ்ந்த தியானென்மென் சதுக்க சம்பவம்.

சாமான்ய மக்களுடன் இணக்கமாகப் பழகிவந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஹு யாவோ வலிந்துப் பதவி நீக்கம் செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து உடல் நலமின்றி ஹு உயிர் நீர்த்ததும், அறிவுஜீவிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை கிளறச் செய்தது.

இதனால், 1987 -ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதலே பல்வேறு போராட்டங்கள் பெய்ஜிங் நகர வீதிகளில் அரங்கேறிய வண்ணமிருந்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பெய்ஜிங்கில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

JKCoz

இதனால், கொதிப்படைந்த சீன கம்யூனிஸ அரசு இரும்பு கரம்கொண்டு கலவரக்காரர்களை நசுக்கியது. அதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர்.

தோராயமாக, 2,600 பேர் இறந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டாலும், சீனா அரசு தன் மீது படிந்துள்ள பாவங்களின் கரையைத் துடைத்துக் கொள்ளும் நோக்கில் மரண விகிதத்தை ரகசியமாக மறைத்து பாதுகாக்கிறது.

அக்கலவர காலக்கட்டத்தில் ஒரு உயிர்கூட பலியிடப்படவில்லை என்பது சீன அரசு முன்வைக்கும் அபத்தமான வாதம்.

தியானென்மென் சதுக்க சம்பவத்தின் ஓலங்களை உலக மக்களின் பார்வையிலிருந்தும், அரசியல் அரங்கிலிருந்தும் பதுக்கிவிடும் எண்ணத்தில், அந்நாட்களில் ஊடகங்களும், இணையதளமும் முடக்கப்பட்டிருந்ததால் கலவரத்தின் சுவடுகள் இன்றுவரையிலும் முற்றிலும் மர்மமாக உள்ளன.

எனினும், மாணவப் போராட்டங்களை முழுமையாக துடைத்தெறிந்துவிட்ட எக்காளத்துடன் அணிவகுத்து வரும் ராணுவ டாங்கியின் முன்னால் தனியொருவனாக நின்று வல்லாதிக்க அரசுக்கு சவால்விடும் தீரம்கொண்ட மனிதன் ஒருவனின் புகைப்படம், தியானென்மென் சதுக்க கோர சம்பவங்களின் நினைவாக எஞ்சியுள்ளது.

aab3d33b419aa23c2cd0e59a4fc84802ஜெஃப் வைட்னர் எனும் அமெரிக்க புகைப்படக்காரரால் எடுக்கப்பட்ட அப்புகைப்படம் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த புகைப்படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

டைம் பத்திரிகையால் வெளியிடப்பட்ட உலகின் நூறு தலைச் சிறந்த மனிதர்களுள் ஒருவராக அந்த மனிதரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இத்தனைக்கும் அந்த மனிதன் யாரென்ற தகவல்களையோ, அவர் குறித்த செய்திகளையோ இதுவரையிலும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. தியானென்மென் சதுக்க சம்பவத்தின்போது உள்ளூர் ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்ததால் பெய்ஜிங் நகர மக்களுக்கே அச்சம்பவம் பல ஆண்டுகளுக்கு பின்னர்தான் தெரியவந்துள்ளது.

அதனால், அவர் குறித்த விடயங்கள் புதிராகவே இன்றுவரையிலும் நிலைக்கொண்டுள்ளது.

தியானென்மென் சதுக்க சம்பவத்துக்கு பிறகான 13 வது நாளில் அவர் தூக்கிலிடப்பட்டார் என்றும், இரு மாதங்களுக்கு பிறகு சிறைப் பிடிக்கப்பட்டார் என்றும், இன்னமும் நகரத்தின் மையத்தில் ரகசியமாக உயிர் வாழ்கிறார் என்றும் அவர் குறித்த முன்னுக்கு பின் முரணான பலத் தகவல்கள் பரவிக்கிடக்கின்றன.

cdff76f4f85716ac4f366a23c5263343--tank-man-modern-warfare

எனினும், உயிரை விழுங்கும் ராணுவ டாங்கிகளின் எதிரில் எவ்வித சலனமும் காட்டாமல் நெஞ்சில் உரத்தோடு தன் எதிர்ப்பினை அழுத்தமாக பதிவு செய்த முகமற்ற அம்மனிதர் கொடுங்கோன்மைக்கு எதிரான குறியீடாக இன்று உலக மக்களால் கருதப்படுகிறார்.

உலகின் தீர்க்கப்படாத எண்ணற்ற புதிர்களில் ஒன்றாக கைவிடப்பட்ட டேங்க் மேனின் நெஞ்சுரம் சர்வாதிகார பிடியிலிருந்து விடுதலை பெற விரும்பும் அனைவருக்குமான பாலப்பாடம்

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.