சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழியச்சிறை

0
273

சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழிச்றைத்தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

கடந்த 2012 ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 6 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத்தவிறின் 3 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

குறித்த வழக்கானது சட்டமா அதிபரால் யாழ். மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த எதிரியான தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.