நடிகர் சங்க கட்டத்திற்கு ரூ.2.5 கோடி சரவணா ஸ்டோர்ஸ் நிதியுதவி!!

0
302

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.

கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

இந்நிலையில், மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டு நிதி திறட்டப்படுகிறது.

கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இந்த கட்டத்தில் அமைய உள்ளன.

இந்நிலையில், நடிகர் சங்க கட்டடம் கட்ட ரூ 2.5 கோடி நிதியுதவியை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் வழங்கி உள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.