ரஜினி முதல்வராக முடியாது: கன்னட ஜோதிடர் கணிப்பு

0
262

ஜாதகத்தில் கால சர்ப்ப தோ‌ஷம் இருப்பதால் ரஜினிகாந்த் முதல்வர் ஆக முடியாது என்று கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கணித்துள்ளார்.

பெங்களூரு: ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கூறியதாவது:-

ரஜினிகாந்த் மகர ராசிக்காரர். சிம்ம லக்கனம் பொருந்தியவர். அவருக்கு துர்தரா யோகம் உள்ளது அதன்படி அவரை யாரும் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியாது.

ஆனால் அருகில் இருப்பவர்கள் மூலம் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவரது ராசிப்படி வருகிற எம்.பி. தேர்தலில் போட்டியிட்டால் 3 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அவரது ஜாதகத்தில் கால சர்ப்ப தோ‌ஷம் உள்ளது. எனவே எந்த உயரத்திற்கு சென்றாலும் அந்த தோ‌ஷம் ஒருவரை கீழே இழுத்துக் கொண்டு வந்துவிடும்.

எனவே ரஜினிகாந்த் தன்னை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கக்கூடாது. கட்சி தலைவராக மட்டுமே இருப்பது நல்லது.

ஒரு கிங் மேக்கராகவே அவர் இருக்க வேண்டும். அவர் கூறும் நபரையே முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும்.

ரஜினிகாந்தின் அரசியல் கட்சி தமிழகத்தில் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் அரசியலில் அவருக்கு எதிர்ப்புகள் வரும் அதை சமாளித்து வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே கணிப்பை வெளியிட்டிருந்தார்.

அதில் காங்கிரசும், பா.ஜனதாவும் இழுபறியாக வந்தாலும் கடைசியில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று கூறி இருந்தார். #Rajinikanth #RajinikanthPoliticalEntry #tamilnews

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.