பேத்தி கொடுத்த பரிசால் கண்ணீர் விட்ட தாத்தா: நெகிழ்ச்சி சம்பவம்..!! (வீடியோ)

0
96

அமெரிக்காவில் தனது வளர்ப்பு மகன் வழி பேத்தி கொடுத்த பரிசுப் பொருளால், ராணுவ வீரர் ஆனந்த கண்ணீர் விட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் வசித்து வருபவர் Paul. இவருக்கு Marcus என்ற வளர்ப்பு மகனும், Madison என்ற பேத்தியும் உள்ளனர்.

இந்நிலையில், Paul-யின் பிறந்த நாள் அன்று, அவரின் பேத்தி Madison ஒரு பரிசுப்பொருளை அவருக்கு அளித்து, இது பணத்தை விட சிறந்தது என்று கூறியுள்ளார்.

பின்னர், அதனை Paul திறந்து பார்த்தபோது, அதில் சங்கிலி ஒன்று ’Madison Watson’ என்னும் பெயருடன் இருந்துள்ளது. Paul-க்கு முதலில் அது என்னவென்று புரியவில்லை.

பிறகு, அவரின் பேத்தி Madison தனது தாத்தாவிடம் Paul Watson என்னும் அவரின் முழுப்பெயரில் இருந்து Watson என்பதை தனது பெயருடன் இணைத்துள்ளார் என்பதை விளக்கியிருக்கிறாள்.

மேலும், பெயரை சட்டப்படி இணைத்ததற்கான சான்றை, Paul-யின் மகன் Marcus, அவரிடம் காட்டியபோது தான் அவருக்கு விடயமே புரிந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆனந்த கண்ணீர் சிந்திய Paul, தனது பேத்தியை கட்டித் தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.