பிளவடைவதன் இறுதிக்கட்டத்தில் தேசிய அரசாங்கம்!! – ரொபட் அன்­டனி (கட்டுரை)

0
377

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து அமைத்­துள்ள தேசிய அர­சாங்கம் எங்கே முடி­வுக்கு வரப்­போ­கின்­றதோ என்­பதே தற்­போது அர­சியல் ஆர்வலர்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்ள பிர­தான பேசு­பொ­ரு­ளாக காணப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான அறிக்கை குறித்த ஜனா­தி­ப­தியின் அறி­விப்பை அடுத்து இரண்டு தரப்­புக்­க­ளுக்­கு­மி­டை­யி­லான பிளவு உறுதி ஆகி­வி­டுமா என்ற சந்­தே­கமும் வலு­வா­கி­யி­ருக்­கி­றது.

அதா­வது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நாட்கள் எண்­ணப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­ற­னவா என்ற கேள்வி பர­வ­லாக எழு­கின்­றது.

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கை­யின்­போதே ஐக்­கிய தேசியக்­கட்­சிக்கும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மான நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இருப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யது.

அதா­வது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும், மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியும் இணைந்­து­கொள்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­ற­போதே நல்லாட்சி அர­சாங்­கத்தில் பிளவு ஏற்­பட்டு விடுமா என்ற பேச்சு எழுந்­தது.

C3L6pnNUEAITVO8

கூட்டு எதி­ர­ணி

அதா­வது கூட்டு எதி­ர­ணியும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்தால் சுதந்­தி­ரக்­கட்சியுடன் மத்­தியில் ஆட்­சியில் நீடிக்­கக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்டில் ஐக்­கி­ய ­தேசியக்­கட்­சியில் பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் இருந்­தனர்.

எனினும் இறு­தியில் சுதந்­தி­ரக்­கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் இணைந்து கொள்­ளா­ததன் கார­ண­மாக நல்­லாட்­சியின் இருப்­பிற்கு நெருக்­கடி பெரி­தாக ஏற்­ப­ட­வில்லை.

எனினும் பின்னர் தேர்­தலின் பின்னர் கூட்டு எதி­ர­ணியும் சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து கொள்ளும் என்ற பேச்­சுக்கள் அடி­பட தொடங்­கி­யதன் பின்னர் மீண்டும் ஐக்­கிய தேசி­யக் ­கட்­சிக்கும் சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் நெருக்­க­டிகள் ஏற்­பட ஆரம்­பித்­தன.

தற்­போது மத்­திய வங்கி பிணைமுறி விசா­ரணை குறித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­வந்­துள்ள நிலையில் தற்­போது மீண்டும் இரண்டு தரப்­புகளுக்குமி­டையில் விரி­சல்கள் ஏற்­பட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன.

அது­மட்­டு­மன்றி இரண்டு கட்­சி­க­ளி­னதும் பின்­வ­ரிசை எம்.பி.க்கள் தனித்து செல்லவேண்டும் என்ற நிலைப்­பாட்டை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்­த­வொரு கட்­சியும் பெரும்­பான்மை பலத்தைப் பெற­வில்லை.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி 106 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 95 ஆசனங்­க­ளையும் பெற்று தனித்து ஆட்சி அமைக்க முடி­யாத நிலை­யில் இருந்­தன.

எனினும் 106 ஆச­னங்­களைப் பெற்ற ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினால் வேறு கட்சிகளிலிருந்து ஒரு­சில உறுப்­பி­னர்­களைப் பெற்­றுக்­கொண்டு ஆட்சி அமைக்க முடி­யு­மான நிலைமை இருந்­தது.

ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைக்­க­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்தார்.

அதே­போன்று ஜனா­தி­ப­தியும் அந்த நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்தார். அதனால் இறு­தியில் 2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும், சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட்­ட­துடன் இரண்டு வரு­டங்­க­ளுக்கு இணைந்து தேசிய அர­சாங்­கத்தை கொண்­டு­செல்ல தீர்­மா­னித்­தன.

அதன்­படி கடந்த செப்­டெம்பர் மாதத்­துடன் இந்தப் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை முடிவுக்கு வந்­த­போதும் அதனை டிசம்பர் மாதம் 31 ஆம் ­தி­க­தி­ வரை நீடிப்­ப­தற்கு இரண்டு கட்­சி­களும் இணங்­கின.

அத்­துடன் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் நடந்து முடிந்­ததன் பின்னர் அது தொடர்பில் முடிவு எடுக்­கலாம் என இரண்டு கட்சிகளும் தீர்­மா­னித்­துள்­ளன.

இந்த இரண்­ட­ரை ­வ­ரு­ட­ கா­லப்­ ப­கு­தியில் நல்­லாட்சி அர­சாங்கம் மிகவும் சுமு­க­மான பய­ணத்தை முன்­னெ­டுக்­க­வில்லை.

மாறாக நெருக்­கடி மிக்க ஒரு பய­ணமே முன்­னெ­டுக்­கப்­பட்­டது. விசே­ட­மாக புதிய அரசிய­ல­மைப்பை தயா­ரிக்கும் விட­யத்தில் இரண்டு கட்­சி­களும் இணக்­கப்­பாட்­டுடன் செயற்­பட்­டாலும் பல்­வேறு முரண்­பா­டுகள் இடம்­பெற்­றன.

குறிப்­பாக ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் விட­யத்தில் இரண்டு கட்­சி­களும் கடும் முரண்­பா­டு­களை சந்­தித்து வரு­கின்­றன.

ஐக்­கிய தேசியக் கட்சி, ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டக்­கூ­டாது எனவும் தெரி­வித்து வருகின்றன.

அதே­போன்று பொரு­ளா­தார விட­யங்­க­ளிலும் இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் பாரிய முரண்­பா­டுகள் உள்­ளன.

அத்­துடன் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்­பா­கவும் அபி­வி­ருத்தி சம்­பந்­த­மா­கவும் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் சுமு­க­மான உறவு காணப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் அடிக்­கடி இரண்டு கட்­சி­க­ளி­னதும் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் பரஸ்­பரம் கடும் விமர்­ச­னங்­களை முன்­னெ­டுத்து வந்­தனர்.

ஒரு­வ­ருக்­கொ­ருவர் கடும் வார்த்தைப் பிர­யோ­கங்­களை பயன்­ப­டுத்தி விமர்­ச­னங்­களை முன்­வைத்­துக்­கொண்­ட­துடன் தொடர்ச்­சி­யாக குறை­களை கூறி­வந்­தனர்.

அதா­வது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் அதன் பின்­வ­ரிசை உறுப்பினர்கள் சுதந்­தி­ரக்­கட்­சி­யி­லி­ருந்து விலகி தனி அர­சாங்­கத்தை அமைக்­க­வேண்டும் என்ற விட­யத்தை அடிக்­கடி வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

அதே­போன்று சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்­களும் அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகவேண்டும் என்ற விட­யத்­தையே முன்­னி­றுத்­து­கின்­றனர்.

எனினும் சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணை­வ­தற்கு அக்­கட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகவேண்டும் என்ற நிபந்­த­னையை கூட்டு எதி­ரணி வைத்­த­போது அதனை சுதந்திரக்கட்சி நிரா­க­ரித்­து­விட்­டது.

எவ்­வா­றெ­னினும் தற்­போது பிணைமுறி தொடர்­பான அறிக்கை வெளி­யா­கி­யுள்ள நிலையில் இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையி­லான முரண்­பா­டுகள் தற்­போது அதிகரித்துள்ளன.

எனவே இன்னும் எத்­தனை நாளைக்கு ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யையும் சுதந்­தி­ரக்­கட்­சி­யையும் அங்­கத்­து­வ­மாகக் கொண்ட தேசிய நல்­லாட்சி அர­சாங்கம் நீடிக்கும் என்­பது கேள்­விக்­கு­றி­யாக மாறி­யி­ருக்­கி­றது.

dilan1

இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா,

தேசிய அர­சாங்­கத்தின் நீடிப்பு தொடர்பில் அண்­மையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த சுதந்­தி­ரக்­கட்­சியின் இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா,

கடந்த இரண்­டு­வ­ருட நல்­லாட்­சி­யில்­பல்­வே­று­வி­ட­யங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அதா­வது கடந்­த­ இ­ரண்­டு­ வ­ரு­டங்­க­ளில் ஊழல் விட­யங்­க­ளில் ­நாங்­கள்­ மு­ரண்­பட்­டு­நிற்­கின்றோம்.

அதே­போன்று பொரு­ளா­தா­ர­வி­ட­யத்­தி­லும்­ எங்­க­ளுக்­கு ­தி­ருப்­தி­யில்லை. இவ்­வா­றான விட­யங்­க­ளில் ­நாங்­கள் ­க­டும்­ அ­தி­ருப்­தி­யு­டன்­ இ­ருக்­கின்றோம்.

ஆனால் ஒரு­வி­ட­யத்தில் திருப்­தி­ய­டை­கின்றோம். அதா­வது புதி­ய­ அ­ர­சி­ய­ல­மைப்­பை­ உரு­வாக்­குதல், தேர்­தல்­ மு­றை­மை­யை ­மாற்­று­தல்­ ஆ­கி­ய­ வி­ட­யங்­களில் சுதந்­தி­ரக்­ கட்சி திருப்­தி­ய­டை­கின்­றது.

உண்­மையில் அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரமே­ எங்­கள்­ அ­ர­சி­யல்­ நி­கழ்ச்­சி ­நி­ர­லில்­ முதல் இடத்­தில்­ இ­ருக்­கின்­றது. எனவே அந்­த­ வி­ட­யத்தில் நாங்­கள்­ தி­ருப்­தி­ய­டை­கின்றோம்.

ஆனால் தற்­போ­து­ நாங்­கள் ­பார்க்­க­ வேண்­டி­ய­ வி­ட­யம்­ ஒன்­று­ உள்­ளது. அதா­வ­து­ க­டந்­த ­மூன்­று­ வ­ரு­டங்­க­ளில்­ நாங்கள் எவ்­வாறு செயற்­பட்­டு­ வந்­தோம்­ என்­ப­த­னை­ மக்­கள்­ எவ்வாறு பார்த்­துள்­ள­னர் ­என்­ப­த­னை­ நாங்கள் அவ­தா­னிக்­க ­வேண்­டி­யுள்­ளது.

எனவே தேர்­தல் ­மு­டி­வின்­ பின்னர் நல்­லாட்­சி­ அ­ர­சாங்­கத்தில் தொடர்­வ­தா­ இல்­லை­யா­ என்­ப­து­ கு­றித்த முடி­வை ­எ­டுக்­க­வுள்ளோம்.

அதா­வது எதிர்­வரும் தேர்­த­லுக்­கு­ பின்னர் தேசி­ய ­அ­ர­சாங்­கத்தில் சுதந்­தி­ரக் ­கட்­சி­ நீடிக்குமா ­இல்­லை­யா­ என்­ப­த­னை ­தீர்­மா­னிக்கும் கார­ணி­களில் எதிர்­வ­ரும் ­உள்­ளூ­ராட்­சி ­மன்ற தேர்­தல்­ மு­டி­வுகள் பிர­தா­ன­ இ­டத்­தை­வ­கிக்கும்.

தேர்­தலில் மக்­கள்­ எவ்­வா­றான முடி­வை­ எ­டுக்­கின்­ற­னர்­ என்­ப­த­னை­ வைத்தே எம­து ­தீர்மானம் அமையும்.

எனவே இந்­த­ வி­ட­யத்­தில் ­தேர்­தல்­ மு­டி­வு­கள்­ பி­ர­தா­ன ­இ­டத்­தை ­வகிக்­க­வுள்­ளன என்று தெரி­வித்­தி­ருந்தார்.

அதன்­படி தொடர்ச்­சி­யாக தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் எண்ணம் சுதந்திரக்கட்­சிக்கு இல்லை என்­பது தெளி­வாக தெரி­கின்­றது.

தேசிய அர­சாங்கம் நீடித்து செல்ல வேண்டும் என்­பதில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உறுதி­யாக இருக்­கின்­றனர்.

அதற்­காக அவர்கள் இரு­வரும் சந்­திக்கும் போதெல்­லாம் அது­தொ­டர்பில் ஆராய்ந்து வரு­கின்­றனர்.

colb37a8646164519303_4050103_29022016_kaa_cmyஅண்­மைக்­கா­லத்­திலும் பல்­வேறு தட­வைகள் சந்­தித்து பேசி­யி­ருந்த ஜனா­தி­பதி மைத்திரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தேசிய அர­சாங்­கத்தை 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்­க­வேண்டும் என கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கின்­றனர்.

எனினும் தற்­போது நிலை­மைகள் மோச­ம­டைய ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. எனவே எப்போதும் எதுவும் நடக்­கலாம் என்ற சூழல் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

கடந்த புதன்­கி­ழமை அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் பேசி­யி­ருந்த இணை அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளர்­க­ளான ராஜித சேனா­ரத்­னவும், தயா­சிறி ஜய­சே­க­ரவும் தேசிய அர­சாங்­கத்தை 2020 ஆம் ஆண்டு வரை அசைக்க முடி­யாது என தெரி­வித்­தி­ருந்­தனர்.

யார் என்ன பேசி­னாலும் தேசிய அர­சாங்கம் 2020 ஆம் ஆண்­டு­வரை நீடிக்கும் என அவர்கள் இரு­வரும் தெரி­வித்­தி­ருந்­தனர்.

தற்­போ­து ­நி­லை­மைகள் மாறு­கின்­றன. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தேசிய அர­சாங்­கத்தை நீடிக்­க­வேண்டும் என என்­னதான் விரும்­பி­னாலும் கட்­சியின் ஏனைய உறுப்­பி­னர்கள் அது தொடர்பில் கடும் அதி­ருப்­தி­யு­ட­னேயே இருப்­பதை காண முடி­கின்­றது.

எனவே தேர்தல் முடி­வின்­ பின்னர் தேசிய அர­சாங்­கத்தில் எந்­தப்­பூ­கம்­பமும் வெடிக்கலாம் என்ற நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

இந்த இடத்தில் எதற்­காக தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது என்ற விடயம் குறித்து அனை­வரும் சிந்­திக்க­ வேண்டும்.

இரண்டு கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­ததன் ஊடாக சர்வதேசத்தின் ஆத­ரவை அர­சாங்கம் பெற்­றுக்­கொண்­டதே தவிர தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிவிடயம் என்பவற்றில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த விடயங்கள் அனைத்தையும் செய்வதாக கூறியே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.

ஆனால் அந்த விடயங்கள் செய்யப்படாமலேயே தேசிய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப்போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். குறிப்பாக தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக 2015 ஆம் ஆண்டு உருவாகிய சிறந்ததொரு சந்தர்ப்பம் தற்போது கைநழுவிப் போவதாகவே தெரிகின்றது.

இரண்டு கட்சிகளினதும் சுயநல அரசியல் நோக்கங்களால் இந்த சந்தர்ப்பம் இல்லாதொழிந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

எவ்வாறெனினும் தற்போது நாட்டின் அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் தேசிய அரசியலில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் ரீதியான எதிர்பார்ப்புக்கள் சிதைவடைந்துபோகவும் சாத்தியம் இல்லாமல் இல்லை.

எவ்வாறெனினும் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதுதொடர்பாக அனைத்துத் தரப்பினரும் அவதானம் செலுத்தியுள்ளனர்.

தொடர்ந்து என்ன நடக்கப் போகின்றது என்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதியும் பிரதமரும் தேசிய அரசாங்கத்தை நீடிக்கச் செய்ய என்னதான் முயற்சி செய்தாலும் அந்த முயற்சி கைகூடுமா என்பது தற்போது கேள்விக்குறியாகவே அமைந்திருக்கின்றது.

அரசியல் களத்தில் என்ன நடக்கப்போகின்றது என்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

ரொபட் அன்­டனி

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.