சதிசெய்து சொத்தில் பங்கு வாங்க சசிகலா எய்த அம்புதான் அம்ருதா

0
263

மெரு­கூட்­டப்­பட்ட முகம், அலை­பாயும் கூந்தல், தேர்­த­லுக்­காகக் கூடுதல் மேக்­கப்பில் இள­மை­யாக மாறி­யி­ருக்­கிறார் ஜெ. தீபா.

ஆர்.கே.நகர் இடைத்­தேர்­தலில் போட்­டி­யிடக் கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த தீபா­வுக்கு தனது மனு நிரா­க­ரிக்­கப்­ப­டலாம் என ஒரு சந்­தேகம் ஏற்­பட்­டி­ருந்­தது.

அதே போல் அவ­ரது மனு சரி­யாகப் பூர்த்தி செய்­யப்­ப­டா­ததால் நிரா­க­ரிக்­கப்­பட்டு விட்டது.

அவ­ரிடம், நீங்கள் சீரி­ய­ஸாகப் போட்­டி­யிட விரும்­பி­ய­தாகத் தெரி­ய­வில்­லையே? வேட்பு­மனு தாக்­க­லுக்கே தாம­த­மாக வந்­தீர்­களே என்று பேச்சுக் கொடுத்தோம். அப்­போது அவர் அளித்த பேட்டி:

நான் மனு தாக்கல் செய்ய வரும்­போது மண்­டல அலு­வ­ல­கத்­திற்குள் பொலிஸார் என்னை உள்ளே விடாமல் தடுத்­த­தால்தான் லேட்­டா­னது.

வரும் வழியில் கூட பல இடங்­களில் என் காரைத் தடுத்­தனர். மனுத்­தாக்கல் முடியும் நேரத்­திற்குள் நான் வந்­து­வி­டக்­கூ­டாது என்று முயற்சி செய்­தனர்.

இப்­ப­டி­யெல்லாம் செய்­வார்கள் எனத் தெரிந்­துதான் முன்­கூட்­டியே வழக்­க­றி­ஞர்கள்  இரு­வரை உள்ளே அனுப்பி “டோக்கன்” போட வைத்­தி­ருந்தேன். அதனால்தான் மனுத்­தாக்கல் செய்­யவே முடிந்­தது!

வெற்றி பெற முடி­யாது என்று அலட்­சி­ய­மாக இருந்­த­தால்தான் இப்­படி ஆகி விட்­டதா?

எனக்கு வெற்­றி­வாய்ப்பு பிர­கா­ச­மாக இருப்­ப­தாக நான் சொல்­ல­வில்­லையே? கடு­மை­யான போட்டி நில­வி­யது உண்­மைதான்.

போன தடவை எனக்கு இருந்த வர­வேற்பு இப்­போது இருக்­கு­மான்னு கூடத்­தெ­ரி­யாது. ஆனால், நான் இப்ப ரொம்பப் பக்­கு­வப்­பட்­டி­ருக்­கிறேன்.

ஏதோ ஒரு வகையில் மக்­க­ளுக்கு சேவை செய்­யணும் என்­கிற எண்­ணத்­தில்தான் தொடர்ந்து அர­சி­யலில் ஈடு­பட்டு வரு­கிறேன்!

201712031232599393_Amrutha-answers-Why-she-did-not-reveal-that-she-is_SECVPF.gifதிடீர், திடீ­ரென காணாமல் போய் விடு­கி­றீர்­களே உண்­மை­யி­லேயே உங்­க­ளுக்கு தீவிர அர­சி­யலில் ஆசை உள்­ளதா?

நிச்­ச­ய­மாக இல்லை. நான் இப்­ப­டி­யொரு நிலைக்குத் தள்­ளப்­பட்டேன் என்­றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு பத்­தி­ரி­கை­யா­ள­ராக மக்­க­ளுக்குப் பணி­யாற்ற வேண்டும் என்­ப­துதான் எனது கனவு. ஆனால் காலம் என்னை அர­சி­ய­லுக்குள் இழுத்து வந்­து­விட்­டது. இதில் எனக்கு முழு ஈடு­பாடு இல்­லைதான். ஆனாலும், கடைசி வரை உறு­தி­யோடு நிற்பேன்!

நான் ஜெய­ல­லி­தாவின் மகள் என்று அம்­ருதா என்­பவர் நீதி­மன்றம் வரை சென்­றி­ருக்­கி­றாரே? அவர் உண்­மையில் ஜெய­ல­லி­தாவின் மகள்­தானா?

அது அத்­த­னையும் பொய். எனது அத்­தையின் சொந்­தங்கள் அனை­வ­ரையும் எனக்குத் தெரியும். எனது பாட்டி சந்­தி­யா­வுக்கு இரண்டு பிள்­ளை­கள்தான்.

எனது தந்தை ஜெயக்­கு­மாரும் அத்தை ஜெய­ல­லி­தாவும் மட்­டும்தான். சைலஜா என்­ப­வரை எங்கள் உற­வுக்­கா­ரங்க யாருக்­குமே தெரி­யாது!

அம்­ரு­தாவை நீங்கள் சந்­தித்­தி­ருக்­கி­றீர்­களா?

அம்­ரு­தாவை ஒரே­யொரு முறை பார்த்­தி­ருக்­கிறேன். 2000, 2001 ஆம் ஆண்டு வாக்கில், சசி­க­லாவின் கணவர் நட­ராசன் ஏற்­பாட்டில் சைல­ஜாவும் அம்­ரு­தாவும் சென்­னைக்கு அழைத்து வரப்­பட்­டனர்.

எனது அத்­தையின் மகள் அம்­ருதா என்று அப்­போதே அவர்கள் சொன்­னார்கள். நாங்கள் ஏற்­க­வில்லை. எங்கள் வீட்­டிற்குள் அவர்­களைச் சேர்க்­காமல் எனது தாயார் விரட்டி விட்டார்!

லலிதா என்­பவர் கூட ஜெய­ல­லி­தா­விற்கு மகள் பிறந்­த­தாகக் கூறி­யி­ருக்­கி­றாரே?

லலிதா யார்? அவர் எங்­க­ளுக்கு எப்­படி உறவு என்­பதை ஆதா­ரத்­தோடு சொல்ல வேண்டும்.

ஜெய­ல­லிதா உயி­ருடன் இருக்­கும்­போது இவர்கள் எல்லாம் ஏன் வர­வில்லை? அத்தை ஜெய­ல­லிதா இறுதி மூச்­சு­வரை மக்­க­ளுக்­காக மட்­டுமே வாழ்ந்து மறைந்தார். எனது அத்­தைக்குக் குழந்­தையே கிடை­யாது!

தனக்கு டி.என்.ஏ சோதனை செய்து பார்க்­கலாம் என்று அம்­ருதா ஓங்கிச் சொல்கிறாரே?

இதன் பின்­ன­ணியில் இருப்­பது சசி­க­லாவின் குடும்­பம்தான். நாங்கள் ஜெய­ல­லி­தாவின் வாரி­சுகள் என்று உரிமை கோரக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே புதிது புதி­தாக ஆட்­களைப் பேச வைக்­கின்­றனர்.

ஜெய­ல­லி­தாவின் சொத்தில் பங்கு வாங்­கு­வ­தற்­கா­கவே இது போன்ற பிர­சவக் கதைகள் முளைத்­துள்­ளன!

போயஸ் கார்டன் வீடு உங்­க­ளுக்கும் தீபக்­கிற்கும்தான் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

அந்த வீடு எங்கள் குடும்ப பாரம்பரியத்தின் அடையா ளம். அவரது வீடு எங்களுக்குத்தான் சொந்தம்.

அவரது நினைவாக போயஸ் கார்டன் இல்லத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன். அதற்காகத்தான் தொடர்ந்து போராடுகி றேன். சொத்துக்காக அல்ல!

இப்படிச் சொன்ன தீபாவுக்கு, போயஸ் கார்டனில் பங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் போய் விடவில்லை!

தகவல்கள்: ஷண்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.