ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா – வீடியோ

0
246

2018 புதிய ஆண்டு பிறந்ததை பலரும் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் சிம்பு – ஓவியா இணைந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் `மரண மட்ட’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு. இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை உடைய சிம்பு சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான `சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

அவரது இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் படமும் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.

201801011129022965_1_Marana-Mattai-Oviya2._L_styvpfஇந்நிலையில், சிம்புவின் இசையில் உருவாகியிருக்கும் `மரண மட்டை’ பாடல் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த பாடலை நடிகை ஓவியா பாடியிருக்கிறார். ஆர்.ஜே.விஜய் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்.

இதற்கு முன்பு தான் உருவாக்கிய ஆல்பத்தில் தானே பாடி ரசிகர்களை மகிழ்வித்த சிம்பு, இந்த முறை ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை ஓவியாவை பாட வைத்திருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த பாடல் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.