வடக்கு கிழக்கு இணைப்பின் அவசியம்!! – திரு­மலை நவம் (கட்டுரை)

0
245

பெப்­ர­வரி 10 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லா­னது ஆளும் அரா­சாங்­கத்­துக்கு மக்கள் ஆத­ரவு உள்­ளதா அல்­லது குறைந்து விட்­டதா என்பதை மதிப்­பீடு செய்யும் தேர்­த­லாக இருக்­கப்­போ­கி­றது.

அதே­வேளை எதிர்க்கட்­சி­க­ளுக்கு குறிப்­பாக மஹிந்த ராஜபக் ஷ அணிக்கு பரீட்சைப் போராக இருக்­கப் ­போ­கி­றது என்­பது ஏதோவொரு வகை­யி­லுண்மை.

வட – கிழக்கைப் பொறுத்­த­வரை மேற்­கு­றிப்­பிட்ட வாய்ப்­பாட்டை பிர­யோ­கிக்க முடியாவிட்­டாலும் இந்த தேர்­த­லா­னது கூட்­ட­மைப்­புக்கும் அதற்கு எதிரே அணி­கட்டி நிற்கும் மாற்றுக் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லான பலப்­ப­ரீட்­சையை பரி­சோ­தித்துப் பார்க்கும் ஒரு குட்டித் தேர்­த­லா­கவே கணிக்­கப்­ப­டு­கி­றது.

தேசியம், தமிழ்த்­தே­சியம், அர­சியல் தீர்வு என்ற முக்­கோணப் போராட்­ட­மாக நடைபெறவுள்ள உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யி­ருக்கும் கட்­சிகள் வியூகம் வகுத்து செயல்­படத் தொடங்­கி­யுள்­ளன.

வட – கிழக்கில் கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்கும் தேசிய கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு, மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான கட்­சி தேசி­யத்தை முன்­நி­றுத்தி போட்­டி­யி­டு­கின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு நேரொத்த போட்­டி­யா­ளர்­க­ளாகக் காணப்­படும் தமிழர் விடு­தலைக் கூட்­டணி, தமிழ்க் காங்­கிரஸ், சுயேச்­சைக் ­கு­ழுக்கள் என்­பன தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு தனது தமிழ்த் தேசியக் கோட்­பாட்­டி­லி­ருந்து தடம்­பு­ரண்டு விட்­டது.

தமிழ் மக்­களை வேறு­பா­தைக்கு கொண்டு செல்ல எத்­த­னிக்­கி­றது. அதற்கு ஒரு முடிவு கட்­டப்­பட வேண்­டு­மென்ற விசனம் கொண்­ட­வர்­க­ளாகப் போட்­டி­யி­டு­கின்­றார்கள்.

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது இத் தேர்தல் மூலம் சர்வதேசத்­திற்கும் சில­வற்றை ஞாப­க­மூட்­ட­ வேண்டும்.

சமஷ்டி முறை­யி­லான அர­சியல் தீர்வு, வட – ­கி­ழக்கு இணைப்பு, போர்க்­குற்ற விசாரணையில் சர்­வ­தேச பங்­க­ளிப்பின் ஊடாக நீதி விசா­ர­ணை­யென்­ப­வற்றை தமக்குரிய தாரக மந்­தி­ர­மாகக் கொண்டு இத்­ தேர்­தலை அதற்­காகப் பயன்­ப­டுத்தும் உபாயத்தை மேற்­கொள்ளும் நோக்கில் நகர்ந்­து­ கொண்­டி­ருக்­கி­ன்றது என்­பது பொதுவான பார்வை.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முதன்­மைப்­ப­டுத்த வேண்­டிய விடயம் வட­கி­ழக்கு இணைப்பு என்ற விவ­கா­ர­மாகும்.

அண்­மைக்­கா­ல­மாக வட – கி­ழக்கு இணைப்பு தொடர்பில் ஒரு தொய்வு நிலைமை காணப்­ப­டு­கி­றது என்­பது பொது­வா­கவே மக்­களின் அபிப்­பி­ரா­யங்­க­ளாகக் காணப்படுகிறது.

ஜனா­தி­ப­தியோ, பிர­த­மரோ இது பற்­றிய ஒரு தெளி­வான கருத்­தைக் ­கொண்­ட­வர்­க­ளாகக் காணப்­ப­ட­வில்லை.

இவ்­வி­ணைப்புத் தொடர்பில் கடு­மை­யான அதி­ருப்­தி­களை அர­சியல் தலை­வர்கள் கூறி ­வ­ரு­வ­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மௌனம் சாதித்து வரு­கிறார் என்ற கருத்தே விர­வி ­நிற்­கி­றது.

அதேவேளை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வட –­ கி­ழக்கு இணைப்பு என்­பது சாத்­தி­ய­மற்­றது என அடித்துக் கூறி வரு­கிறார்.

அண்­மையில் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட இடைக்­கால அறிக்­கையில் வட –கிழக்கு இணைப்பு தொடர்பில் ஒரு­வ­ரி­கூட சொல்­லப்­ப­டாத விடயம் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­ற­தென பல கட்­சிகள் விமர்­சனம் செய்து வரு­கின்­றன.

இவ்­வா­றான சூழ்­நி­லை­யில்தான் தமி­ழர்­களின் மரபு வழித்­தா­ய­கத்தைப் பிரிக்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நிரா­க­ரிக்க வேண்டும் என தமிழ் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் (பேரவை) கோரிக்­கை­யொன்றை அண்­மையில் விடுத்­துள்­ளது.

அவர்கள் தமது அறிக்­கையில் பின்­வரும் விட­யங்­களை அடை­யா­ளப்­ப­டுத்­தியும் விளக்கியும் மேற்­படி அறிக்­கையை விடுத்­துள்­ளனர்.

தமி­ழர்­களின் மர­பு­வழித் தாய­க­மான வட –­ கி­ழக்கு பிரிக்க முடி­யாத ஒரு அலகு என்பதை ஏற்­றுக்­கொள்­ளாத, மிகத் தெளி­வாக வரை­ய­றுக்­காத புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆத­ர­வ­ளிக்க கூடாது என தமிழ் சட்­டத்­த­ர­ணிகள் பேரவை வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தது.

அவர்கள் தமது அறிக்­கையில் மேலும் குறிப்­பிட்டு சுட்டிக் காட்­டி­யுள்ள விடயம் 2013 ஆம் ஆண்டின் வட ­மா­காண சபைத் தேர்­தலின் போதும் 2015 ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்­த­லுக்­காக விஞ்­ஞா­ப­னமும் பின்­வரும் விட­யங்­களை வலி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

வட – ­கி­ழக்கு தமி­ழர்­களின் தாயகம். அந்த தாய­கத்தின் இணைப்பு மீண்டும் அமுல்படுத்­தப்­பட வேண்டும்.

இந்த கைங்­க­ரி­யத்தை இலங்கை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்ள வேண்­டு­மென கூறப்பட்ட விஞ்­ஞா­ப­னத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்­டதன் கார­ண­மா­கவே மேற்­படி இரண்டு தேர்­தல்­க­ளிலும் பல­மான ஆணையை வழங்­கி­யி­ருந்­தார்கள்.

எனவே பெற்ற ஆணையை உதா­சீனம் செய்­யக்­கூ­டாது என சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்கள் சட்­டத்­த­ர­ணிகள் பேர­வை­யினர்.

Banda selva_CIபிரிக்­கப்­பட முடி­யாத வட – கிழக்கே தமி­ழர்­களின் தாயகம் என்ற கோட்­பாட்டின் அடிப்படை­யி­லேயே தந்தை செல்வா கைச்­சாத்­திட்ட 1957, பண்டா – செல்வா உடன்படிக்கை, 1965 இல் டட்லி – செல்வா உடன்­ப­டிக்கை என்பன மேற்கொள்ளப்பட்டன.

இவ்­ உ­டன்­ப­டிக்­கை­களில் கைச்­சாத்­திட்­டதன் ஊடாக, பிரிக்­கப்­ப­டாத வட – கி­ழக்கு தமிழர்­களின் தாயகம் என்­பதை ஆட்­சிக்கு வந்த ஸ்ரீலங்கா அர­சாங்­கங்­களும் ஏற்றுக்கொண்டன.

அவ்­வா­றான ஒரு சூழ்­நி­லையில் தான் 13ஆவது திருத்தச் சட்­டத்­தி­னூ­டாக வட – கிழக்கு தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இலங்கை அர­சாங்­கத்தின் சதித்­திட்டம் கார­ண­மாக, இணைக்­கப்­பட்ட வடக்கு 2006 ஆம் ஆண்டு பிரிக்­கப்­பட்டு வேறு­ப­டுத்­தப்­பட்­டது.

இது ஏற்­றுக் ­கொள்­ளப்­பட முடி­யாத, அங்­கீ­க­ரிக்­கப்­பட முடி­யாத ஒரு விவ­கா­ர­மாகும் என சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

விகி­தா­சார தேர்தல் முறை­யென்ற போக்கும், பண்பும், வடி­வமும் மாற்­றப்­பட்டு, கலப்­பு மு­றை­யென்னும் புதிய முறையில் வாக்­க­ளிப்­ப­தற்கு மக்கள் எதிர்­நோக்கி காத்­தி­ருக்கும் நிலையில் அர­சியல் சாச­னத்­தி­னூ­டாக அர­சியல் தீர்வை எதிர்­நோக்கிக் காத்­தி­ருக்கும் வட – ­கி­ழக்கு மக்­களின் ஆழ­மான அபி­லா­ஷை­களில் ஒன்­றான விட­ய­மா­கவே வட கிழக்கு இணைப்பு, என்னும் விவ­கா­ரமும், விட­யமும் முக்­கி­யப்­பட்டு நிற்­கி­றது.

உள்­ளூ­ராட்சி மன்­ற­த் தேர்தல் என்­பது ஒரு குட்டித் தேர்தல் என்­ப­தற்கு அப்பால், வட – கி­ழக்­கி­லுள்ள கிராமம் ஒவ்­வொன்­றிலும் மக்கள் அந்த அபி­லா­ஷை­களைக் கொண்டவர்க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள் என்­பதை நிரூ­பிக்க வேண்­டு­மாயின் வட – கி­ழக்கு மக்­களைப் பொறுத்­த­வரை நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லா­னது, முக்­கியம் கொண்­டது மாத்­தி­ர­மல்ல மக்­களை மீள் ஒழுங்­கு­ப­டுத்தும் ஒரு தேர்­த­லா­கவும் இது பார்க்­கப்­பட வேண்டும்.

கிரா­மங்­க­ளி­லி­ருந்து தான் மக்கள் அபிப்­பி­ரா­யங்கள் பிறக்­கின்­றன. அவர்­களின் அபி­லா­ஷைகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

இன்னும் ஆழ­மாகக் கூறப்­போனால் வெகு­சனப் போராட்டம் வெடிப்­பதும் மக்கள் புரட்சி பிறப்­பெ­டுப்­பதும் உள்ளூர் அல­கு­க­ளி­லி­ருந்­துதான் என்­ப­தற்கு உலகில் பல உதாரணங்கள் உண்டு.

வட – ­கி­ழக்­கி­லுள்ள எட்டு மாவட்­டங்­க­ளிலும் நூற்­றுக்­க­ணக்­கான உள்­ளூ­ராட்சி சபைகள் இயங்கி வரு­கின்­றன.

இவையே, மக்­களின் நேரடி அபிப்­பி­ரா­யங்­க­ளையும் விருப்பு வெறுப்­புக்­க­ளையும் வெளிப்­ப­டுத்தும் அல­கு­க­ளாகக் காணப்­ப­டு­பவை.

இவ் அடிப்­படை அல­கு­க­ளி­லி­ருந்து புறப்­பட்டு வரும் கருத்­துக்­களே உண்­மை­யான, யதார்த்­த­மான கருத்­துக்­க­ளாக இருக்க முடி­யு­மென்­பது பொது­வா­ன­வுண்மை.

வட – கிழக்கு இணைப்பு தொடர்பில் உள்­ளூ­ராட்சி சபைகளில் வாழும் மக்­களின் அபிப்­பி­ரா­யங்­களும் கருத்­துக்­களும் சர்­வ­தே­சத்­துக்கு கொண்டு செல்­லப்­பட வேண்­டிய தேவை­யுள்­ளது என்­பதைப் புரிந்து கொண்டு நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தலை கவ­ன­மாகப் பயன்­ப­டுத்த வேண்­டி­ய­தேவை தமிழ்த் ­த­ரப்­பி­ன­ருக்­கு­ரிய தார்மீகக் கட­மை­யா­க­வுள்­ளது என்­பது தெரி­யப்­படும் உண்மை.

இன்­றைய சூழ்­நி­லையில் வட­ – கி­ழக்கு இணைப்பு என்­பது எவ்­வ­ளவு அவ­சி­ய­மா­ன­தென்­பது கிழக்­கு வாழ் தமிழ்ப்­ பேசும் மக்கள் அவ­ச­ர­மாக தீர்­மா­னிக்க வேண்­டிய காரியமாக மாறி­ வ­ரு­கி­றது.

northவன­வ­ளங்கள், விவ­சாய நிலங்கள், சுற்றுலாப்­பி­ர­தே­சங்கள், காணிகள், தொல்­பொருள் தடயங்கள், சமயத் தலங்கள் என்­பன பலாத்­கா­ர­மா­கவும் மிகவும் கவ­ன­மா­கவும் பறித்தெ­டுக்­கப்­ப­டு­கி­ற­தென்­பதை அண்­மைக் ­கா­ல­மாக மிக வேக­மாக கிழக்கு மக்கள் மாத்­தி­ர­மல்ல வடக்கு வாழ் ­மக்­களும் கண்டு கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இலங்­கையின் சுதந்­தி­ரத்­துக்­குப் பின் கிழக்கில் கல்­லோ­யாத்­திட்டம், கந்­த­ளாய்த்­திட்டம் என்ற போர்­வையில் பெருந்­தொ­கை­யான குடி­யேற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இதன் கார­ண­மாக கிழக்கின் வன­வ­ளங்கள், விவ­சாய நிலங்கள் பறித்­தெ­டுக்­கப்­பட்­டன. இன்னும் பறித்­தெ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­நி­லை­மைகள் திரு­கோ­ண­மலை மாவட்டம், வன்­னிப்­பி­ர­தேசம், அம்­பாறை மாவட்டங்­களில் மிக கச்­சி­த­மா­கவே திட்­ட­மிட்­ட­மு­றையில் மேற்­கொள்­ளப்­பட்டு­ வ­ரு­கின்­றன என்­பது நாம் அறிந்து கொண்­டி­ருக்­கின்ற விடயம், விவ­காரம்.

மீன­வக்­கி­ரா­மங்கள் என்ற வகையில் வள­முள்ள கடல் ஓரங்கள் பெருந்­தொ­கை­யாக பறித்­தெ­டுக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றன.

வட­ – கி­ழக்­குக்கு சொந்­த­மில்­லாத பிற மாவட்­டங்­களைச் சேர்ந்­த­வர்கள் பரு­வ­கால மீன்­பி­டிப்­புக்கு வந்து போகின்­றார்கள் என்று கூறிக்­கொண்டு அரச உத­வி­யு­டனும், படை­ப­லத்­து­டனும் நிரந்­த­ர­மா­கவே குடி­யேற்­றப்­ப­டு­கி­றார்கள்.

இந்தக் குடி­யேற்­றங்­க­ளுக்­காக வட – ­கி­ழக்கு மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் பறித்­தெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

இன்னும் அரச காணி சுவீ­க­ரிப்பு என்ற போர்­வையில் சுவீ­க­ரித்து, விற்­கப்­ப­டு­வ­துடன், 30 வருடம் தொடக்கம் 90 வரு­டத்­துக்கு மேலுள்ள காலப்­ப­கு­திக்கு குத்­த­கைக்கு விடப்­ப­டு­கின்­றன.

ஆனால் வட­ – கி­ழக்கு வாழ் ­மக்­க­ளுக்கு இந்த சலு­கைகள் வழங்­கப்­ப­டு­வ­து­மில்லை. அவர்­களின் கோரிக்­கைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­து­மில்லை. கிழக்­கி­லுள்ள, வனப்பும் வள­மு­முள்ள கடற்­க­ரைப்­ பி­ர­தே­சங்கள் சுற்றுலாத்துறை அபி­வி­ருத்தி, விஸ்­த­ரிப்பு என்ற போர்­வையில் அந்­தந்த பிர­தேச சபைகள் மற்றும் பிர­தேச செய­ல­கங்­களின் அனு­ம­தி­யின்­றியும் ஆலோ­ச­னை­யின்­றியும் வெளி­நாட்டு கம்­ப­னி­க­ளுக்கு பெருந்­தொகை பணத்­திற்கு விற்­கப்­ப­டு­கின்­றன. குத்­த­கைக்கு விடப்­ப­டு­கின்­றன.

இது மட்­டு­மின்றி வெளி மாவட்­டங்­களைச் சேர்ந்த பணம் கொழுத்­த­வர்­க­ளுக்கும் அவர்­களின் கூட்டு உற­வி­னர்­க­ளுக்கும் மிகக்­கு­றைந்­த­ளவு விலைக்கு விற்­கப்­பட்டு, பிர­தே­ச­வா­சிகள் அநா­தைகள் ஆக்­கப்­ப­டு­கின்­றார்கள்.

இந்த நிலை­மைகள் புதிய ஆட்சி உரு­வாக்­கப்­பட்­டதன் பின் சமா­தானம் என்ற கார­ணத்தின் அடிப்­ப­டையில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

DSC_0456இவை தடுக்­கப்­பட வேண்­டு­மாயின் சுதா­க­ரிக்­கப்­பட வேண்­டு­மாயின் உள்­ளூ­ராட்சி சபைகள் பல­முள்­ள­தா­கவும் அதி­காரம் கொண்­ட­வை­யா­கவும் இருக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்பின் மத்­தியில், வட­கி­ழக்கு இணைக்­கப்­ப­டு­வதன் மூலமே பல­முள்ள அதி­கார சபை­க­ளாக, உள்­ளூ­ராட்சி சபைகள் ஆக­மு­டி­யு­மென்­பதை வட – ­கி­ழக்­கி­லுள்ள மக்கள் உண்­மை­பூர்­வ­மாக புரிந்­து­ கொள்ள வேண்டும்.

வளங்கள், அர­சியல் அதி­கா­ரங்கள், பொரு­ளா­தார பங்­கீ­டுகள் வேலை­வாய்ப்­புகள் என்­ப­வற்றால் வட – ­கி­ழக்கு மக்கள் பாதிக்­கப்­ப­டு­கி­றார்கள் என்­ப­தற்கு அப்பால், மதம், கலா­சாரம், பண்­பாடு என்­ப­வற்­றினால் எவ்­வ­ளவு தூரம் அந்­நி­யப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள் அடையாள அழிப்­பு­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கி­றார்கள் என்­ப­தற்கு அண்­மையில் நடை­பெற்ற ஒரு சம்­ப­வத்தை உதா­ர­ண­மாகக் காட்டலாம்.

மூதூர் சூடைக்குடா கிராமம் பாரம்பரியமாக ஒரு தமிழ்க்கிராமம். போர்த்துக்கேயர் கிழக்கைக் கைப்பற்றி ஆளத் தொடங்கிய காலத்திலிருந்து வரலாற்று வகையிலும் புகழ் கொண்ட ஓர் கிராமம்.

இக்கிராமத்திலுள்ள திருக்குமரன் ஆலயம் கோணேசர் கோயில் தோன்றிய காலம் முதல் பூர்வீக மற்றும் புராணப் பெருமை வாய்ந்த இக்கிராமத்தில் அமைந்திருக்கும் மேற்படி முருகன் ஆலயத்தை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழமையைப் போல் தொல்பொருள் தடயங்கள் இருக்கின்றன என இல்லாத பொல்லாத காரணங்களைக் கூறி இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட – கிழக்கிலுள்ள பெருந்தொகையான வரலாற்று இடங்கள் மத மற்றும் பண்பாட்டு இடங்களுக்கு இவ்வாறான குறுக்கீடுகளும் தடைகளுமே விதிக்கப்பட்டு சூழ்ச்சி மயமாக அவை கபளீகரம் செய்யப்படுகின்றன.

இந்நிலைமை தடுக்கப்பட வேண்டும், மாற்றப்பட வேண்டுமாயின் வட – கிழக்கு இணைக்கப்பட்டு பலமுள்ள உள்ளூராட்சி சபைகள் ஆக்கப்பட வேண்டும்.

கடந்த கால அரசியல் யாப்புக்கள் தமிழர்களின் இறைமையை மறுத்ததோடு தமிழ்த் தேசத்தினை அங்கீகரிக்கவில்லை.

அத்துடன் சிங்கள பௌத்த பேரினவாதத்தை பலப்படுத்துவதற்கு துணைநின்றன. இதன் காரணமாகவே கொள்கையில் உறுதியாக நின்ற தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடந்த கால அரசியலமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இவ்வாறானதொரு நிலை தொடர்ந்தும் இடம்பெறாமல் வட – கிழக்கு இணைப்பை வலுப்படுத்த வேண்டுமென தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.இரத்தினவேல் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-திரு­மலை நவம்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.