க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவனை தேடிச் சென்று வாழ்த்திய வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே – (வீடியோ)

0
360

வடமாகாணத்தில் உருவாகிய வைத்தியர்களும், பொறியியலாளர்களுமே இன்று தென் பகுதியில் அதிகளவில் கடமையாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

எனவே தென் பகுதிகளில் தமிழ் வைத்தியர்கள் கடமையாற்றுவது போல் வடமாகாணத்தில் தமிழ் வைத்தியர்கள் கடமையாற்றாமை மிகவும் வருந்ததக்க விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் என்ற மாணவன் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.

இந்த மாணவனுக்கு வாழ்த்து தெரிவிக்க ஆளுநர் ரெஜினோலட் குரே இன்று காலை அவரின் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இவ்வாறு வாழ்த்துக்களை தெரிவித்த ஆளுநர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆளுநர், யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் கல்வி நிலை ஓங்கி காணப்பட்டதாகவும், ஆனால் அந்த நிலைமை சமாதானம் ஏற்பட்ட பின்னர் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் கூறினார்.

எனினும் தற்போது கல்வி நிலையை உயர்த்த வட மாகாண கல்வியமைச்சில் பல நிர்வாக ரீதியான பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக தகுதியான ஆசிரியர்களை தகுதியான பாடசாலைகளுக்கு நியமிப்பதில் பல சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவித்த அவர், வட மாகாணத்தின் முன்னேற்றம் கல்வியில் மாத்திரமே தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

000 (1)000 (3)000-2

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.