காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்!!

0
188

தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் ஸ்ருதிஹாசனுக்கும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலுக்கும் நெருக்கமான நட்பு மலர்ந்தது.

201712272136465239_shruti-haasan-shares-her-christmas-photo-with-her-lover_SECVPF.gifஇருவரும் ஒன்றாக ஒருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. இந்நிலையில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சில மாதங்களுக்கு முன் தந்தை கமல்ஹாசனுக்கு மைக்கேல் கோர்சலை அறிமுகப்படுத்திய ஸ்ருதி, சமீபத்தில் தாய் சரிகாவுக்கும் தனது காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். அதேபோல் ஆதவ் கண்ணாதாசனின் திருமணத்தில் மைக்கேல் கோர்சலுடன் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தனது காதலருடன் நெருக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.