உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானது – பௌதீக விஞ்ஞான பிரிவில் ஹாட்லி கல்லூரி மாணவன் முதலிடம்

0
444

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வேளியாகியுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும் என உதவிப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சையில் பெளதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் அதிசிறந்த பெறுபேறுகளை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் ருவன்கரன் பெற்றுள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா கல்லூரியின் திலினி சுனிதா அதிசிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறை சுஜாதா கல்லூரியை சேர்ந்த டிலானி ரசந்திகா வர்த்தக பிரிவில் அதிசிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று முற்பகல் 10.00 மணிமுதல் பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்ட பாடசாலைகளுக்குஇன்று பிற்பகல் முதல் தபால் மூலம் பெறுபேறுகளை அனுப்பி வைக்கவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடம் பெற்ற யாழ். மாணவன்
14720_content_st_patricks_al_2017_

தற்போது பெறுபேறுகள் வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் கணிதப் பிரிவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

யாழ்.பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த போல் ஜனாசன் என்ற மாணவனே அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும், மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த மாணவன் ஆங்கில மொழிமூலத்தில் பரீட்சையில் தோற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.