ரஷியாவில் விபத்து சுரங்கப்பாதைக்குள் பஸ் புகுந்து 4 பேர் சாவு – (வீடியோ)

0
1087

மாஸ்கோ, ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் ஸ்லாவியன்ஸ்கி பவுல்வர்டு என்ற இடத்தில் உள்ள சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு அருகே நேற்று காலை பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் சாலையில் அங்கும் இங்குமாக ஓடியது. இதனால் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் அலறிஅடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து அந்த பஸ், மெட்ரோ ரெயில் நிலையத்தின் சுரங்கப்பாதைக்குள் புகுந்தது. சுரங்கப்பாதைக்குள் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது பஸ் மோதி, அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் ஒரு இளம்பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

4791676E00000578-5211397-image-m-45_1514208010004479172FA00000578-5211397-image-a-48_1514213148138479157D900000578-5211397-image-m-40_1514206479754479172E200000578-5211397-image-a-50_1514213205893479172FE00000578-5211397-image-a-49_1514213200654

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.