அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
1610

சென்னை: அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே படங்கள், விளம்பர படங்கள் என பிசியாக உள்ளனர்.

கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஜூலியும் பிசியாகிவிட்டார். விமல் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

அருணா அப்பள விளம்பரத்தில் நடித்துள்ளார் ஜூலி. அந்த விளம்பரம் பற்றி தான் நெட்டிசன்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு ரூ. 10 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஜூலி தான் உறுதி செய்ய வேண்டும்

படத்தில் நடிக்கிறீர்கள், விளம்பர படத்தில் நடிக்கிறீர்கள் அப்படியே தொலைக்காட்சி தொடரில் நடித்தால் நாங்கள் சந்தோஷப்படுவோம் என்று ஜூலிக்கு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூலியின் அப்பள விளம்பரத்தை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் போடப்பட்டுள்ளது. யார் தன்னை கலாய்த்தாலும் ஜூலி அதை எல்லாம் கண்டுகொள்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.