பேப்பர் பொட்டலத்தை பார்த்து ஆடிப்போன ரஜினி: அப்படி அதில் என்ன இருந்தது?

0
272

பேப்பர் பொட்டலத்தை பார்த்து ஆடிப்போன ரஜினி: அப்படி அதில் என்ன இருந்தது?
சென்னை: பேப்பர் பொட்டளத்தை பார்த்து தான் ஆடிப்போனதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இன்று சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காலா படப்பிடிப்பு தாமதமானதால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. அதன் பிறகு மழை வந்தது, பின்னர் மண்டபம் ஃப்ரீயா இல்லை.

இப்ப தான் அந்த நல்ல நேரம் வந்திருக்கு. உங்களை எல்லாம் மறுபடியும் பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம்.

வில்லனாக நான் நடித்துக் கொண்டிருந்தபோது ஹீரோவாக வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏன் என்றால் ஹீரோவாக வேண்டும் என்ற நினைப்பில் நான் சினிமாவுக்கு வரவில்லை.

நான் உங்களை வைத்து படம் எடுக்க விரும்புகிறேன் என்று கலைஞானம் சார் என்னிடம் கூறினார்.

நான் வில்லன் கதாபாத்திரம் என்று நினைத்தேன். அவரோ உங்களை ஹீரோவாக வைத்து படம் எடுக்க விரும்புகிறேன் என்று சொன்னதை கேட்டு எனக்கு ஒரே ஆச்சரியம்.

ஹீரோவாகவா, இல்லீங்க சாரி நான் நடிக்க மாட்டேன் என்றார். பின்னர் மீண்டும் 2 நாட்கள் கழித்து மறுபடியும் வந்து பார்த்தபோது அவரை எப்படியாவது அவாய்ட் பண்ண வேண்டும் என்று நினைத்தேன்.

அப்போது நான் ரூ.25 முதல் 30 ஆயிரம் தான் வாங்கிட்டு இருந்தேன். ரூ. 50 ஆயிரம் கொடுங்க என்று கலைஞானம் சாரிடம் கேட்டேன்.

அப்படி சொன்னாலாவது மறுபடியும் என்னை தேடி வர மாட்டார் என்று நினைத்தேன்.
3 நாட்கள் கழித்து ஒரு பேப்பரில் பணத்தை சுற்றிக் கொண்டு வந்து என் முன் வைத்து இதில் ரூ. 30 ஆயிரம் இருக்கு அட்வான்ஸ் என்றார்.

நான் ஆடிப்போயிட்டேன். அப்போது பெரிய ஆர்டிஸ்டாக இருந்த ஸ்ரீகாந்த் வில்லன், ஸ்ரீப்ரியா ஹீரோயின் என்றார்கள். சரிங்க நான் நடிக்கிறேன் என்றேன் என ரஜினி கூறினார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.