வைத்தியசாலையில் மஹிந்தவும், நாமலும் : இதில் யாருக்கு சிகிச்சை!!

0
493

உடல்நலக் குறைவினால், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

திருகோணமலையில் இருந்த போது கடந்த வியாழக்கிழமை உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் உடனடியாக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சையளிக்கப்பட்டதை அடுத்து குணமடைந்த இரா.சம்பந்தன் இன்று வீடு திரும்பினார்.

முன்னதாக, இன்று காலை மருத்துவமனையில் இருந்த இரா.சம்பந்தனை முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நலன் விசாரித்தார்.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.