சூர்யாவுடன் மோதும் திரிஷா?

0
274

 

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படமும், நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருக்கிறது.

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மேலும் நவரச நாயகன் கார்த்தி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தை அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மோகினி’ படத்தை ஆர்.மாதேஷ் இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.