எப்போதுமே காதலித்துக்கொண்டு இருக்கிறேன்: ஓவியா

0
59

எப்போதுமே காதலித்துக்கொண்டு இருக்கிறேன் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார்.
‘களவாணி’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஓவியா.

மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் டெலிவிஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று காதல் தோல்வி, தற்கொலை முயற்சி என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டார்.

தற்போது ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். ஓவியா டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பல கேள்விகளுக்கு பதில் அளித்து ஓவியா கூறியதாவது:-

“எனக்கு சிறந்த ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள். இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இல்லை. பல லட்சம் இதயங்களை நான் வென்று இருக்கிறேன். அதுவே போதும். நான் யாரையாவது காதலிக்கிறேனா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

நான் எப்போதுமே காதலித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் யாருடனும் தொடர்பில் இல்லை.

எனக்கு பிடித்த கதாநாயகர் எனது தந்தைதான். ‘காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பாகத்தில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

இந்த படம் முடிந்ததும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க இருக்கிறேன்.

அந்த படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? என்று கேட்கப்படுகிறது.

மனதில் அழுத்தம் இல்லாமல் இருக்கிறேன். அதனால்தான் சந்தோஷம் இருக்கிறது. நடிகர் சிம்பு நல்ல மனித நேயம் மிக்கவர். நடிகர் தனுஷ் இனிமையானவர்”.

இவ்வாறு ஓவியா கூறினார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.