இஸ்ரேல் வீரர் கன்னத்தில் அறைந்த மூன்றாவது பலஸ்தீன பெண் கைது- (வீடியோ)

0
1010

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினர் மீது கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பில் மூன்றாவது பலஸ்தீன பெண் ஒருவர் இஸ்ரேலிய படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பதிவான வீடியோ ஒன்று சமூகதளத்தில் பிரபலம் அடைந்துள்ளது.

இந்நிலையில் மேற்குக் கரையில் நபி சலேஹ் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது நூர் நஜி தமிமி என்ற பெண் இஸ்ரேல் படையினரால் கைது செய்யப்பட்டதாக கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவரது உறவினாரான இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் பெரிதும் அறியப்பட்ட 17 வயது அஹத் தமிமி கடந்த செவ்வாய்கிழமை தனது தாயுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

கையடக்க தொலைபேசி மூலம் கடந்த வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் இரு இஸ்ரேலிய படையினரை நெருங்கிய இரு பலஸ்தீன பெண்கள் அந்த படையினரின் கன்னத்தில் அறைவது மற்றும் உதைப்பதை காண முடிகிறது.

ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிக் பிரகடனத்திற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.