“12 ராசிகளுக்குமான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018”

0
1299

 

ஜோதிடர் டி.ஒய். செந்தில் அவர்கள் 2018-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை துல்லியமாகக் கணித்து  நமக்கு வழங்கியுள்ளார்.

ராசிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட, பிரத்யேக பரிகாரத்தை, ‘முழு நம்பிக்கையோடு’ தொடர்ந்து செய்துவந்தால், ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

•••••

மேஷம் (காலபுருஷ தத்துவப்படி 1-வது ராசி)

 1. பிடித்ததை செய்வீர்கள். சுகம் காண்பீர்கள்.

 2. ஜீவனத்தில் முன்னேற்றம் சகாயமும் ஒருசேர காணலாம்.

 3. புதுப்புது அறிமுகங்கள் கிடைத்து, சமூகவலை விரிவடையும். தக்கவாறு நடந்துகொள்ளுங்கள்.

 4. தர்மசிந்தனை மேலோங்கும். அறம் செய்து பழகுவீர்கள்.

 5. பணப்புழக்கம் அதிகரிக்கும். அதைக் கையாளும் திறனும் கூடும்.

 6. தேகம் மெருகேறும். காந்த சக்தி கூடும்.

 7. தைரியமாக இருப்பீர்கள். நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

 8. பகையும், எதிர்ப்பும் அகலும். இருப்பினும், எங்கும் எதிலும் ஒரு கண் இருக்கட்டும்.

 9. விளையாட்டு, கேளிக்கைகளில் நாட்டம் செல்லும்.

 10. நேரம் காலம் போவதே தெரியாது.

 11. சந்தான பாக்கியம் கிடைக்கும்.

 12. இனம் புரியாத கவலைகளை விட்டொழியுங்கள்.

 13. வில்லங்கத்தை சரிபார்த்து சொத்துபத்து வாங்குவது உத்தமம்.

 14. தாயின் உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளவும்.

 15. புது வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.

 16. சுய முயற்சியினால் மட்டுமே கல்வியில் ஏற்றம் காண முடியும். முடியாதது, முயலாதது மட்டுமே. நினைவில் நிறுத்தவும்.

 17. குடியிருக்கும் வீட்டில் சிறு சிறு மாற்றங்களோ, திருத்தங்களோ செய்யவேண்டி வரும்.

 18. மணம் முடிக்க எண்ணம் இருப்பவர்களுக்கு, வரும் வைகாசி மாதத்துக்குள் நல்ல சேதி தேடி வரும். கல்யாணத்தை பழமை வாய்ந்த கோவில்களில் செய்வது, கண்ணுக்குத் தெரியாத தோஷங்களைக்கூட போக்கிவிடும்.

 19. கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி, குடும்பத்தை கட்டிக் காக்கவும்.

 20. கூட்டு வியாபாரம் முன்னே இனித்து, பின்னே கசக்கும். தவிர்த்தல் நல்லது.

 21. பூர்வீகச் சொத்தை பங்கு போடவேண்டி வரலாம். சரிபங்கும் போட முடியாமல் போகலாம்.

 22. தந்தையின் அரவணைப்பு ஆறுதல் தரும்.

 23. பேரன், பேத்தி எடுக்கும் பாக்கியம் கிட்டும்.

 24. வேலையில் கூடுதல் பொறுப்பு ஏற்பீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். தயாராக இருங்கள்.

 25. மேலானவர்களிடம் நல் அபிப்ராயத்தைப் பெற முயலவும். அது, எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாகும்.

 26. தேவைகளை அதிகரித்துக்கொள்ளாதீர்கள். தேவையில்லாத செலவை குறைத்துக்கொள்ளுங்கள்.

 27. உடன் பிறந்தோரின் அனுகூலம் உண்டு.

 28. புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குலதெய்வத்தின் அருமை பெருமைகளை நடைமுறையில் உணர்வீர்கள்.

 29. நெளிவு சுளிவு தெரிந்து நடந்துகொள்ளுங்கள்.

 30. கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். சரிப்படாது.

 31. பல வருடங்களாக உடல் உபாதைகளுக்கு மருந்து மாத்திரைகள் எடுத்தும் பலன் அடையாதவர்கள், மாற்றுமுறை வைத்தியத்தை நாடலாம். பலன் நிச்சயம் கிடைக்கும்.

 32. பாதுகாப்பாகப் பயணித்து அசம்பாவிதத்தைத் தவிர்க்கவும். நிதானம் உயிர் காக்கும்.

 33. வெளிநாடுகள் செல்வதை தவிர்த்தல் நன்று.

 34. பெரும் தொகையை, ஸ்திரத் திட்டங்களில் சரிபார்த்து முதலீடு செய்யுங்கள். ஆதாயம் அடையலாம்.

 35. செய்தொழிலில் நல்ல லாபம் காணலாம்.

 36. போட்டி பந்தயத்தால் வெற்றியும் உண்டு, ஆதாயமும் உண்டு, பகையும் உண்டு.

பிரத்யேகப் பரிகாரம்

‘நாடி வந்து உதவி கேட்பவர்களுக்கு, தன்னால் ஆன உதவிகளை மனதார செய்து வந்தால்’ ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

{pagination-pagination}

ரிஷபம் (காலபுருஷ தத்துவப்படி 2-வது ராசி)

 1. சுகம் பெற வழி காணுங்கள்.

 2. குலதெய்வ வழிபாடு உறுதுணையாக இருக்கும்.

 3. அழகான வீடு கட்டி, குடி புகுவீர்கள்.

 4. நில புலனில் இருந்து வந்த சிக்கலை தீர்க்கவும்.

 5. வண்டி வாகனம் பெருகும். போக்குவரத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

 6. தீர்க்க ஆயுள் உண்டு.

 7. கல்யாணம் காட்சி உண்டு.

 8. குழந்தைபேறு கிட்டும்.

 9. வி.ஐ.பி. பட்டியலில் இடம் பிடிக்கலாம்.

 10. தாயின் உடல் நலன் தேறும்.

 11. இஷ்டப்பட்டபடி எல்லாம் நடந்துகொள்ள வேண்டாம். கட்டுப்பாடும், கண்ணியமும் அவசியம்.

 12. பணத் தட்டுப்பாடு நிலவும். சிக்கனம் இக்கனம் தேவை.

 13. கஷ்டங்கள் வந்தாலும், தைரியம் குறையாது. நம்பிக்கையோடு செயல்படுவீர்கள்.

 14. மேன் மக்களின் ஆதரவு, பக்கபலமாக இருக்கும்.

 15. தொழிலில் கடுமையான போட்டி நிலவும்.

 16. உழைப்பு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். தீரா அசதி ஏற்படும்.

 17. தேய்பிறை, வளர்பிறை சந்திரன் போன்று லாபம் ஸ்திரத்தன்மையற்று இருக்கும்.

 18. தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.

 19. சகோதரத்துடன் சுமூகப் போக்கை கடைப்பிடியுங்கள். நல்லது.

 20. மறைமுக எதிர்ப்புகள் பெருகுவதால், எங்கும், எதிலும் எவரிடமும் எச்சரிக்கை தேவை.

 21. மாற்றுமுறை வைத்தியத்தை முழுமையாக நம்பி சிகிச்சை மேற்கொண்டால், வியாதி பூரண குணமடையும்

 22. கடன் அன்பை முறிக்கும். கடனில்லா பெருவாழ்வு வாழ ஆசைப்படுங்கள்.

 23. வம்பு வழக்குகளை இழுபறியாக்கி, கால நேரங்களை விரயமாக்காதீர்கள். அது புத்திசாலித்தனம் அல்ல.

 24. யாரையும் நம்பி ஜாமீன் போட வேண்டாம்.

 25. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். அதனால் எதிலும் ஜாக்கிரதையாக இருங்கள்.

 26. நாவடக்கம் சேதாரத்தை முற்றிலும் தவிர்க்கும்.

 27. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் மட்டுமே கல்வி சிறக்கும்.

 28. விளையாட்டுப்போக்கை தவிர்ப்பது நல்லது. இல்லையேல் விதி விளையாடும்.

 29. நேரம் காலமே போகாத மாதிரி இருக்கும்.

 30. கர்ப்பிணிகளுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டாலும், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக வைத்திய சாலைக்கு விரைந்தால், தாய் சேய் நலன் காக்கப்படும்.

 31. கணவன் – மனைவி உறவை பலப்படுத்துங்கள். ஒருவருக்கொருவர் பிடித்தவாறு நடந்துகொள்ளுங்கள்.

 32. கூட்டு வியாபாரம், தாங்க முடியாத அளவுக்குப் பாரமாகும்.

 33. தீய பழக்க வழக்கம், தீபோல தன்னைத் தானே சுடும். விட்டுவிடுதல் நல்லது.

 34. வெச்சகுறி தப்பாமல் இருக்க, தினமும் தியானம் செய்து மனத்தை ஒருமுகப்படுத்துங்கள்.

 35. பெரும் தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுத்து, குடும்பப் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

 36. வெளிநாடுகளுக்குச் செல்வதை குறைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் தவிர்த்திடுங்கள்.

 37. குழந்தைகளுடன், அவர்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு அவ்வப்போது சென்று வாருங்கள்.

 38. வேலை தேடுவோருக்கு நல்ல இடத்தில் வேலை அமையும். அதில் ஏற்றமான மாற்றமும் காணலாம்.

பிரத்யேகப் பரிகாரம்

சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்கும் அறப்பணிகளுக்கு உதவி வந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

{pagination-pagination}

மிதுனம் (காலபுருஷ தத்துவப்படி 3-வது ராசி)

 1. பார் போற்றும் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

 2. பணவீக்கம் குறையும்.

 3. செய்த புண்ணியமும், பாக்கியமும் தேடி வந்து காக்கும்.

 4. நேரம் காலம் போவதே தெரியாது.

 5. மூதாதையர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

 6. குலதெய்வம் கோயிலுக்கு அடிக்கடி சென்று வாருங்கள். கெட்டது விலகும்.

 7. பழைய கணக்குகளுக்கு இப்போது விடை கிடைக்கும்.

 8. கொஞ்சி விளையாட, கட்டி அணைக்க அடுத்த வாரிசு ஜெனிக்கும்.

 9. பொறுமையாகக் காத்திருந்ததற்குப் பலனாக, எதிர்பார்த்தது கிடைக்கும்.

 10. மெத்தனமாக இருப்பீர்கள்.

 11. கவலைகள் சற்று குறையும்.

 12. அங்கும் இங்கும் அலைய பிடிக்காது.

 13. தந்தையினால் அனுகூலம் உண்டு.

 14. உயரப் பறந்து உயர் கல்வி கற்பீர்கள்.

 15. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அதுவே பரஸ்பர நன்மை தரும்.

 16. கூட்டு, வேட்டு, வீண் சத்தங்கள்தான் மிஞ்சும்.

 17. மாற்றுமுறை வைத்தியத்தால், வாதம், பித்தம், கபத்தை நேராக்கி, உடல நலனை சீராக்கவும்.

 18. அசையா சொத்துகளின் வழக்குகள் அசையாமல் இருக்கும். இருப்பினும் அசைந்துகொடுக்க வேண்டாம்.

 19. பெற்ற தாயை கவனியுங்கள்.

 20. வண்டி வாகனத்தை மாற்றுவீர்கள்.

 21. மனுசு கனமாகும். புத்தி வேகமாகும். இரண்டையும் ஒருங்கிணையுங்கள். ஆற்றல் மேம்படும்.

 22. தடைக்கு மடை போட்டு, கசடற கற்கவும்.

 23. வாக்கையும், போக்கையும் காப்பாற்றுங்கள்.

 24. சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க முயற்சிக்காதீர்கள். இம்முறை பெரிய மீன் ஏமாறாது.

 25. நம்பிக்கையோடு இருங்கள். அதுதான் எல்லாம். துணிந்தவருக்கே எல்லாம் வசப்படும்.

 26. புது சொந்தபந்தங்களால் உறவின்முறை விரிவடையும்.

 27. வங்கியில் கடன் வாங்கலாம், கிடைக்கும். தனியாரிடம் வேண்டவே வேண்டாம். கிடைத்தாலும் தவிர்க்கவும்.

 28. எந்த எதிர்ப்பையும் நேரெதிரே எதிர்க்க வேண்டாம்.

 29. புதியதாக அறிமுகமானவர்களுடன் பழக்கவழக்கம் வைத்துக்கொள்ள வேண்டாம்.

 30. விழிப்புணர்வோடு செயல்படுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.

 31. நாலா பக்கமும் கவனித்து, நிதானமாக வண்டி ஓட்டுங்கள். விபத்தை தவிர்க்கலாம்.

 32. அதிர்ஷ்டம், அதோட இஷ்டம்தான்.

 33. நேர் வழியே நேர்த்தியான வழி. குறுக்கு வழி, அது சறுக்கு வழி.

 34. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கவும். அதுவே நல்லது.

 35. வசதியைப் பொருத்து, வாழ்வாதாரத்தை ‘டாப்அப்’ செய்யுங்கள்.

 36. நாலு பேருக்கு யாருன்னு தெரிந்தவர், இப்போது நாற்பது பேருக்கு தெரிவீர்கள்.

 37. ஸ்திரமான விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். தொலைநோக்கில் நன்மை உண்டு.

 38. சரமாரியாகப் பணம் விரயமாகும். காப்பாற்ற நல்ல வழி, ‘தர்மம் செய்வதுதான்’. கஷ்டகாலத்தில் காப்பதும், செய்த தர்மம்தான்.

 39. கண்டம் விட்டு கண்டம் செல்வீர்கள். ஆதாயம் அடைவீர்கள்.

 40. தேட தேட, போக வழி கிடைக்கும். நம்புங்கள்.

பிரத்யேகப் பரிகாரம்

நலிவடைந்த குடும்பத்துக்குத் தேவையான பலசரக்குப் பொருட்களை, மாதாமாதம் வாங்கித் தந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

{pagination-pagination}

கடகம் (காலபுருஷ தத்துவப்படி 4-வது ராசி)

 1. உடல் உறுதி பெறும். உள்ளம் தெளிவு பெறும். முகம் பொலிவு பெறும்.

 2. பயம் நீங்கி தைரியம் பிறக்கும்.

 3. நோய்கள் மறைந்து, ஆரோக்கியம் அடையலாம்.

 4. பொறுமையாக இருந்தால் பகையை எளிதாக வெல்லலாம்.

 5. எதிர்த்தவர்கள் அடங்குவர். அவர்களை மற்றவர்கள் தற்போது எதிர்ப்பர்.

 6. கடன் கரைவதால் சுமை குறையும்.

 7. கண்டம் அண்டாது. பாம்பும் தீண்டாது.

 8. வம்பு வழக்கு பைசலாகும்.

 9. விரயச் செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

 10. நல்ல பழக்கங்களை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். வாழ்க்கை சிறக்கும்.

 11. வெளிநாட்டினரால் அங்கீகரிக்கப்படுவீர்கள்.

 12. நல்ல தூக்கம் வரும். எந்தக் கவலையும் இல்லாமல் தூங்குங்கள்.

 13. புனித யாத்திரை சென்று வருவீர்கள்.

 14. துணிச்சல் பிறக்கும். அதில் வேகம் இருக்கும்.

 15. சகாயம் சகாயமாகக் கிடைக்கும்.

 16. முயற்சிகளுக்குப் பலன் மேல் பலன் கிடைக்கும்.

 17. தம்பி தங்கைகளைப் புரிந்து பக்குவமாக நடந்துகொள்ளுங்கள்.

 18. பேசும் பேச்சால் மற்றவர்கள் கவரப்படுவார்கள்.

 19. புத்தியை தீட்டி, வெற்றிக்கான யுக்தியை வகுப்பீர்கள்.

 20. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வேண்டியவற்றை வாங்கும் யோகம் வரும்.

 21. பேரன் பேத்திகளோடு கொஞ்சி விளையாடும் பாக்கியம் கிடைக்கும்.

 22. சுகம் பெற வழி பிறக்கும். நிலபுலன் பெருகும்.

 23. தாயின் உடல் நலனில் அக்கறை செலுத்தினால் சுகம் உண்டு.

 24. வீட்டை திருத்தியமைக்கும் திட்டம் நிறைவேறும்.

 25. வண்டி, வாகனத்தை மாற்றும் எண்ணமுள்ளவர்கள் தாராளமாக மாற்றலாம்.

 26. மனத்தைப் பத்திரப்படுத்துங்கள். வீணானவற்றை மனத்திலிருந்து ஒதுக்கிவிடுங்கள்.

 27. மேற்கல்வி பயில்வதைவிட, தகுந்த வேலையை உருவாக்கி, நாலு காசு சம்பாதிப்பதில் கவனம் செலுத்தலாம். அனுகூலம் கிடைத்து, எதிர்காலம் சிறக்கும்.

 28. அன்றாடப் பணிகளைத் தோய்வின்றி சரிவர செய்யுங்கள்.

 29. பாட்டன் சொத்து இருப்பின், பேரனுக்கு வந்து சேரும்.

 30. புத்திரப் பேறு கிடைக்கும். புத்திரர்களால் நற்பெயரும் கிடைக்கும்.

 31. ஆபத்துகள் வருமுன் அறிந்து, தக்கவாறு செயல்படுதல் நல்லது.

 32. வாழ்க்கைப்பட்டவரின் உடல் நலனில் முன்னேற்றம் காணலாம். மாற்றுமுறை வைத்தியத்தை நாடவும்.

 33. வேண்டியவர்களுடன் கூட்டு சர்ந்து ஜீவனம் செய்ய முயற்சிக்க வேண்டாம். தொலைநோக்கில், அது யாருக்கும் நன்மை பயக்காது.

 34. தந்தையின் சுமைகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டி வரும்.

 35. கர்மத்தில் தன்னைக் காக்கும் தர்மத்தைக் காத்திடுங்கள்.

 36. பழமைவாய்ந்த திருத்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும்.

 37. மாறும் காலத்துக்குத் தகுந்தவாறு, வாழ்வாதாரத்தில் மாறுதல்கள் செய்யவேண்டி வரும். அதனால் முன்னேற்றமும் அடையலாம்.

 38. லாபம் தொடர, கடும் முயற்சி செய்வீர்கள். பயன் கிட்டும்.

 39. போட்டி, பந்தயத்தால் ஆதாயம் உண்டு.

 40. உடன்பிறந்தோரை அனுசரித்துச் செல்வது நல்லது.

 41. கீர்த்தி, புகழ், தைரியம் கூடும்.

பிரத்யேகப் பரிகாரம்

வயதானவர்களுக்கு வேண்டிய உபகாரங்களை, நேரம் காலம் பாராமல் தொடர்ந்து செய்துவந்தால்’ ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

{pagination-pagination}

சிம்மம் (காலபுருஷ தத்துவப்படி 5-வது ராசி)

 1. மனம்போல மாற்றம் அமையும்.

 2. தொழில் வியாபாரத்தை, விஸ்தரிப்பீர்கள்.

 3. வேற்று மொழியினராலும், மாற்று மதத்தினராலும், ஆதாயம் அடைவீர்கள்.

 4. தூரதேசப் பயணம் திருப்புமுனையாக அமையும். ஊக்கம் பிறக்கும். ஆக்கம் துவங்கும்.

 5. தீர்க்க ஆயுள் உண்டு.

 6. அறிவு செறிவாகும்.

 7. கெட்டிமேளம் ஒலிக்க, மணவாழ்வு மலரும்.

 8. குடியிருக்க இஷ்டப்பட்டப்படி சொந்த வீடு கட்ட, நேரம் காலம் கனிந்து வரும்.

 9. உயர வளர, நல்ல ஒரு களம் அமையும்.

 10. ஜீவனத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்களில்தான் ஏற்றத்துக்கான சூட்சுமமும் ஒளிந்துள்ளது. இனம் கண்டு பயனுறுங்கள்.

 11. லாபம் பெருக்கெடுத்து ஓட, நில்லாமல் ஓடுவீர்கள்.

 12. பெற்றோர் உற்றோர் பாசம் விளங்கும்.

 13. கீர்த்திக்கும் புகழுக்கும், பாத்திரமாகும்படி நடந்துகொள்ளுங்கள்.

 14. சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும்.

 15. கடன் உடன் கிடைத்து, பற்றாக்குறையை போக்கிக்கொள்ளலாம்.

 16. நாள்பட்ட சீக்கு, யுனானி முறை வைத்தியத்தில் கட்டுப்படும்.

 17. அதிர்ஷ்டம், மாயாஜால கண்ணாமூச்சி ஆடும்.

 18. தாய்சேய் நலனில் கூடுதல் அக்கறை காட்டப்படுதல் வேண்டும். பரிச்சயமான மருத்துவரிடம் பிரசவம் பார்க்கவும். விழிப்புணர்வு அவசியம்.

 19. நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல் விளையாட்டெல்லாம் பரஸ்பர வினையாகி, பின் தீரா சினமாகும்.

 20. குலம் காக்க, குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்தினருடன் அடிக்கடி சென்று வாருங்கள்.

 21. பணத்தைக் கொண்டு, பத்தும் செய்யவேண்டி வரும்.

 22. நேரம் காலம், தள்ளுமுள்ளு உண்டு பண்ணும்.

 23. கெட்ட சகவாசம், சகலவித தோஷத்தையும் தேடும். அண்டாமல் விலகிக்கொள்ளுங்கள்.

 24. உழைப்புக்கேற்ற பரிசு கட்டாயம் கிடைக்கும்.

 25. சகிபதியிடையே பரஸ்பர ஒற்றுமை வேண்டும்.

 26. பேசுவதில் கவனம் தேவை. நினைத்ததெல்லாம் பேச வேண்டாம். பெயர் கெட்டுப்போகும்.

 27. நிலபுலத்தை தக்கவைத்துக்கொள்ளுங்கள். தகுந்த பாதுகாப்பும் செய்துகொள்ளுங்கள்.

 28. படிப்பில் நாட்டத்தை உண்டு பண்ணுங்கள். எண்ணச் சிதறல்கள் கூடாது. பின்னடைவை ஏற்படுத்தும்.

 29. இரவு நேரப் பயணத்தை தவிர்த்தல் வேண்டும்.

 30. தர்மம் பல செய்து, சர்வ பாக்கியம் பெறவும். செய்த தர்மமே, கர்மத்தில் துணை நிற்கும்.

 31. சகோதர உறவில், உரசலோ விரிசலோ, ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

 32. மறக்க வேண்டியவற்றை நினைக்காதீர்கள்.

 33. போகாத ஊருக்கு, வழி தேட வேண்டாம்.

 34. கண்ட இடங்களில் கண்டதைச் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

 35. போட்டி பந்தய கோதா, காலை வாரி சடுகுடு ஆடவைக்கும்.

 36. பழக்கவழக்கம் விரிவடையும். உலகம் சுருங்கும்.

 37. பெற்ற குழந்தைகளின் பாதுகாப்பை, உறுதி செய்துகொள்ளுங்கள்.

பிரத்யேகப் பரிகாரம்

வாழ வழி தேடி, சாலைகளில், அங்கும் இங்கும் அல்லாடி சுற்றித் திரிந்துகொண்டிருக்கும் எளியோருக்கு, உணவும் உடையும் வழங்கி வந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

{pagination-pagination}

கன்னி (காலபுருஷ தத்துவப்படி 6-வது ராசி)

 1. முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களே சிரமங்களிலிருந்து காக்க உள்ளன.

 2. பிரதி பலன் கருதி எந்த ஒரு செயலையும் செய்யாமல், நற்செயல்களாக இருந்தால், விட்டுவிடாமல் தொடர்ந்து அவற்றை செய்து வாருங்கள்.

 3. லஷ்மிகடாட்சத்திற்கு வழி வகுக்கப்படும்.

 4. இல்வாழ்க்கை, நல்வாழ்க்கையாக மலரும்.

 5. கணவன் – மனைவி அன்யோன்யம் கூடி குடும்பம் விருத்தியாகும்.

 6. உடல் நலனில் அக்கறை செலுத்தினால் சுகம் உண்டு.

 7. எதிர்காலத்தைப் பற்றி அச்சம் கொள்ளாமல், அன்றையபொழுதில் செய்ய வேண்டிய காரியங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து செய்துவந்தால், மனதில் நிம்மதி ஏற்படும்.

 8. போட்டித் தர்வுகளில் வெற்றிபெற நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் மட்டுமே பலன் உண்டு.

 9. நிலபுலன் விஷயங்களில், எந்த ஒரு முடிவையும், அவசரப்பட்டு எடுக்காமல் இருப்பதே மேல்.

 10. குடியிருக்கும் வீட்டில் சிறுசிறு திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டி வரும்.

 11. நான்கு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பதை முடிந்த அளவு தவிர்க்கவும். அவசிய காலங்களில் மட்டும் ரயிலில் பயணிக்கலாம்.

 12. மனது மெள்ள நகரும். சில நேரங்களில் மனம் கனமாகும். விளையாட்டு, யோகா போன்றவற்றில் மனத்தைச் செலுத்தி, இலகுவாக்கிக்கொள்ளுங்கள்.

 13. முன்ஜென்ம வினையால், கடன்படவும், கடன்பட்டவர்களுக்கு, பிரதி உபகாரம் செய்ய வேண்டியும் வரும்.

 14. வாழ்வாதார நிமித்தமாக, புதிய திட்டங்களில் ஈடுபடாமல் இருப்பதே உத்தமம்.

 15. கெடுதல் விலக, பகையை தவிர்த்து வாருங்கள்.

 16. சகவாசத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

 17. வாழும் வாழ்வின் மீது நம்பிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

 18. விரைவாக இயங்க வேண்டிய விஷயங்களில் காலதாமதம் கூடாது.

 19. சுப நிகழ்வுகள் நிகழ்த்தி, மகிழ்ச்சி காண்பீர்கள்.

 20. தாயை அரவணைத்துச் செல்லுங்கள்.

 21. கூட்டு ஜீவனத்தில் கூட்டம் சேர்க்காதீர்கள்.

 22. நீர்த்தார் கடமைகளைச் செய்து, அவர்களின் நல்லாசியைப் பெறுங்கள்.

 23. போட்டி பந்தயங்களில், வெற்றியும் பகையும் சேர்ந்தவாறு உருவாவதால், போட்டியில் வென்றதைப்போல, போட்டியிட்டவர்களின் சூழ்ச்சி வலையிலும் சிக்காமல், கழுவுற மீனில் நழுவுற மீனாக இருங்கள்.

 24. புகழ் அடுத்த நிலைக்குச் செல்லும். அதற்குத் தகுதியாக இருங்கள்.

 25. சகோதர வகையில், பரஸ்பர உறவை வளர்த்துக்கொள்ளுங்கள்.

 26. மிச்சம் மீதி என்று கருதக்கூடிய விஷயங்களில் கவனமாக இருங்கள்.

 27. லாபத்தை ஈட்டிக்கொள்ள, சந்தர்ப்பங்கள் கூடி வரும். அதை நழுவவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.

 28. பங்காளிகள் ஒன்று கூடும் நிகழ்வுகள் ஏற்படும்.

 29. மற்றவர்கள் பேசும்போது செவி சாய்க்கவும்

 30. பணம் வரும் போகும். போயிட்டும் வரும்.

 31. லாபத்தில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தாமல், அதை ஈட்ட தேவையானவற்றிலும் அக்கறை செலுத்துவது நலம்.

 32. எதிர்கால நலனைக் கருதி போடப்படும் மூலதனங்கள், போடப்படும் அளவை அளந்து போடப்படுதல் வேண்டும்.

 33. வெளிநாடுகளிலும் வெளிமாநிலத்திலும், வேலை நிமித்தமாக வாசம் செய்பவர்கள், தாய் மண்ணுக்கே திரும்புவது உத்தமம்.

பிரத்யேகப் பரிகாரம்

வாழ்வில் நலிவடைந்தோருக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைத் தொடர்ந்து செய்துவந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

{pagination-pagination}

துலாம் (காலபுருஷ தத்துவப்படி 7-வது ராசி)

 1. மூன்றாம் பிறை சந்திரன் போன்று, பொலிவோடு காணப்படுவீர்கள்.

 2. கடந்த கால அனுபவங்களின் பயனாக, வாழ்வைப் புதுவிதமாக அணுகுவீர்கள்.

 3. முழு ஆற்றலை வெளிப்படுத்தி, எதை ஒன்றையும் துணிச்சலோடு செய்து முடிப்பீh;கள்.

 4. லஷ்மிகடாட்சத்தோடு, சகல சம்பத்தும் வாய்க்கப் பெறுவீர்கள்.

 5. உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டு.

 6. வாழ்வாதாரத்துக்குத் தேவையான விஷயங்களில் முனைப்புக் காட்டுவீர்கள்.

 7. தடைப்பட்டு வந்த சந்தான பாக்கியம் இனி கிட்டும். சிலருக்கு இரட்டை குழந்தை அதிர்ஷ்டமும் உண்டு.

 8. பூர்வபுண்ணியத்தின் பலனாக தலைமுறை சொத்துகள் வந்து சேரும்.

 9. தர்ம காரியங்களை முன்நின்று கச்சிதமாக வழி நடத்திச் செல்வீர்கள்.

 10. பாடல் பெற்ற ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

 11. தலைக்கு வந்த கண்டம், தலைப்பாகையோடு போய்விட்டது. பாக்கியமே, பாக்கியம்.

 12. வானூர்தியில் உயர பறந்துக்கொண்டே, இந்தப் பரந்து விரிந்த உலகத்தை, வானத்திலிருந்து காணும் புது அனுபவம் வாய்க்கப் பெறுவீர்கள்.

 13. பழக்க வழக்கங்கள், சர்வ சாதாரணமாக விரிவடையும் தருணம் இது.

 14. நாவுக்குச் சுவையான போஜனமும், செவிக்கு இனிதான செய்திகளும் கிடைக்கப்பெற்று சுகம் காண்பீர்கள்.

 15. சுப காரியங்களுக்காகப் பணத்தைச் செலவு செய்து மகிழ்வீர்கள்.

 16. சூழ்நிலை அறிந்து பேசுதல் நன்மை பயக்கும்.

 17. புதிய நுணுக்கங்களை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல் பெறுவீர்கள்.

 18. குடும்பத்தில், ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பீர்கள்.

 19. உடல் நலனும் மன நலனும் சீரடைய, யோகாசனம் செய்து வாருங்கள்.

 20. அமைதியும் மனநிறைவும் ஏற்பட, கோபத்தையும் வருத்தத்தையும் அறவே விட்டுவிடுங்கள்.

 21. ஹோமியோபதி, யுனானி, சித்தா, ஆயுர்வேதம் போன்ற மாற்றுமுறை வைத்தியத்தால் ரோகம் மறையும்.

 22. பதற்றப்படாமல், நிதானமாகவும் பக்குவமாகவும் நடந்துகொண்டால், இடையூறுகளை எளிதாக வெல்லலாம்.

 23. கடன், அடகு, வட்டி, வட்டிக்கு வட்டி போன்ற விஷயங்களை சர்வஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.

 24. கஷ்டப்பட்டு படிக்காமல், இஷ்டப்பட்டு படித்தால், கல்வியில் மேன்மை உண்டு.

 25. தாய்க்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் இருந்து பாசம் காட்டுங்கள்.

 26. பகை விலக, பகைவர்களிடமிருந்து விலகிச் செல்லுங்கள்.

 27. பயத்தை உருவாக்கும் எண்ணங்களை தூரப் போடுங்கள்.

 28. வெற்றி தோல்வியை சமமாகப் பாவியுங்கள். பிடித்ததை செய்வதிலேயே வெற்றி உண்டு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

 29. கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் செவி சாயுங்கள்.

 30. அதிர்ஷ்டக் காற்று வாழ்வில் வீச ஆரம்பிக்கும்.

 31. வம்பு வழக்கை இழுபறியாக்க வேண்டாம்.

 32. பணத்தைப் பொன்னாகவோ, மண்ணாகவோ மாற்றி, பத்திரப்படுத்தி வையுங்கள்.

 33. காலம் மாற மாற, எல்லாம் இடமாறும் என்பதை அனுபவத்தில் காண்பீர்கள்.

 34. வண்டி வாகனம் ஓட்டும்போது, கவனச் சிதறல்கள் கூடவே கூடாது.

பிரத்யேகப் பரிகாரம்

வாயில்லா ஜீவன்களுக்கு, தினமும் வயிராற உணவளித்துவந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

{pagination-pagination}

விருச்சிகம் (காலபுருஷ தத்துவப்படி 8-வது ராசி)

 1. தன்னைப்பற்றி நல்ல அபிப்ராயம் வைத்திருப்பீர்கள்.

 2. தனம், செல்வம், லாபம் உண்டாகும்.

 3. துணிவே உறுதுணையாகும்.

 4. மனம், மணம் வீசும். இனிமை இனி காணலாம்.

 5. நிலபுலம் விஷயங்களில் வெற்றியும், லாபமும் உண்டு.

 6. சொகுசு வாகனம் அமையும்.

 7. தீர்க்காயுசு வாழலாம்.

 8. பராக்கிரமம் உண்டாகும்.

 9. எதிர்ப்புகள் கட்டுக்கடங்கி இருக்கும்.

 10. எதையும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

 11. சித்தர்களின் ஜீவசமாதிகளுக்குச் சென்றுவரும் பாக்கியம் வாய்க்கும்.

 12. பேசும் பேச்சில் தேவையற்ற வார்த்தைகளைத் தவிர்த்தல் நல்லது.

 13. மனம் ஒன்றினால் மட்டுமே படிக்க இயலும். மனத்தை ஒருமுகப்படுத்த சதுரங்கம் விளையாடலாம்.

 14. குடும்பத்தினரைப் புரிந்துகொண்டு, அதற்குத் தகுந்தவாறு அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

 15. சகோதரம் வகையில் இழுபறி இருக்கும். லாகவமாக நடந்துகொள்ளுங்கள்.

 16. வெகுஜனங்களின் ஒத்துழைப்பு ஒத்திப்போகும்.

 17. பிடித்தபடி உறைவிடத்தை அமைத்துக்கொள்வீர்கள்.

 18. தாயின் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்.

 19. பேர் சொல்ல பிள்ளை ஜெனிக்கும்.

 20. ஜாலியையே ஜோலியாக கொள்ளாமல், ஜோலியை ஜாலியாக பார்த்தால் வாழ்வு சிறக்கும்; குடும்ப வளம் பெருகும்.

 21. ஆரோக்கியம் சீர்பட, சைவ உணவை மட்டும் ருசியுங்கள்.

 22. குலதெய்வ தரிசனம், தீர்க்க முடியாத தோஷத்தைக்கூட போக்கிவிடும். மண்டலத்துக்கு ஒருமுறையேனும், குலதெய்வ சன்னதிக்குச் சென்று வாருங்கள்.

 23. அறிவை நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

 24. பணம், கொடுக்கல் வாங்கலில் தடுமாற்றங்கள் வேண்டாம்.

 25. மந்திரங்கள் ஜெபிக்க ஜெபிக்க, ரோகம் மறையும்.

 26. கடன் வாங்கினாலும், உடன் அடைக்கலாம். இருப்பினும், கடன் வாங்காமல் இருப்பது உத்தமம்.

 27. ஆயிரம் காலப் பயிரே திருமண உறவு. அந்த இருமண உறவு அந்நியத்தில் அமையும்.

 28. கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. இது முதுமொழி.

 29. பெண்கள் விஷயத்தில் சர்வஜாக்கிரதையாக இருங்கள்.

 30. தொழில் வரவு செலவு கணக்கை ‘க்ராஸ் செக்’ செய்யுங்கள். செய்தால் பலருக்கு ‘செக்’ வைக்கலாம். அதில் ஒரு சிலரை ‘செக்மேட்டும்’ செய்யலாம்.

 31. ரேஸ், லாட்டரி, சூதாட்டங்கள் நம்பவைத்து ஏமாற்றும். கொடுத்துக் கெடுக்கும்.

 32. இரவு நேரங்களில் வெளியில் உலாவுவதைத் தவிர்த்திடுங்கள்.

 33. வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்.

 34. மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் செல்ல வேண்டாம்.

 35. தந்தையின் நலன் பேணி காக்கப்பட வேண்டும்.

 36. பழையன கழிதலும், புதியன புகுதலும் உண்டு. இதைத்தான் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்கள்.

 37. வஞ்சப் புகழ்ச்சி பேசுவோரை அருகில் சர்க்க வேண்டாம்.

 38. தொழிலில் அகலக்கால் வைக்காமல், சிறுகப் போட்டு, பெருக அள்ளுங்கள்.

 39. ஞானம் கூடும்.

 40. தண்டச் செலவு செய்யாமல், இருப்பை பத்திரப்படுத்துங்கள்.

பிரத்யேகப் பரிகாரம்

வழிபாட்டு ஸ்தலங்களில் உழவாரப் பணிகளை உளமாற செய்துவந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

{pagination-pagination}

தனுசு (காலபுருஷ தத்துவப்படி 9-வது ராசி)

 1. செய்யும் தொழிலில் லாபம் பார்க்கலாம்.

 2. நண்பர்களுடன் ஜாலியாக கேளிக்கைகளில் பொழுதைப் போக்குவீர்கள். வசந்த காலங்கள் மீண்டும் வந்துபோன மாதிரி உணர்வீர்கள்.

 3. ஞானயோகியின் தீர்க்கதரிசனம் கிடைக்கும். அதனால் தோஷங்கள் விலகும்.

 4. துணிவும் உண்டு. பணிவும் உண்டு.

 5. நல்லதை இனம் கண்டுகொள்வீர்கள். நல்லதே நடக்கும்.

 6. சுகம் அகம் காண்பீர்கள்.

 7. நிலபுலம் நல்விளைச்சல் தரும்.

 8. வீட்டை இஷ்டப்படி திட்டமிட்டுக் கட்டுவீர்கள்.

 9. பிறந்த மண்ணுக்கு விஜயம் செய்வீர்கள்.

 10. குலதெய்வத்துக்குச் செய்ய நினைத்ததை செய்வதற்கு சந்தர்ப்பம் வரும்.

 11. மழலைச் செல்வம் சேரும். இல்லம் குதூகலமாகும்

 12. பசித்துப் புசிப்பதே ருசி. ஆகவே, பசித்திருங்கள்.

 13. உடல் உபாதைகள், இயற்கை வைத்தியத்துக்குக் கட்டுப்படும்.

 14. இனிய மணவாழ்க்கை துவங்கும்.

 15. கஷ்டம் தீர, கஷ்டப்பட்டு உழையுங்கள்.

 16. தந்தையின் உடல் நலன் தேறும்.

 17. சுறுசுறுப்பாக இயங்க, தினமும் யோகாசனம் செய்யுங்கள்.

 18. அவசியமான செலவுகளை மட்டும் செய்யுங்கள்.

 19. பேசுவதில் கவனம் தேவை.

 20. கற்றதையும், அதன்பால் பெற்றதையும் மற்றவர்களுக்கும் பயன்படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே தர்மம்.

 21. வேலை நிமித்தமாக, குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூரில் வாசம் செய்யவேண்டி வரலாம்.

 22. போக்குவரத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். சக பயணிகளிடம் வீண் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள வேண்டாம்.

 23. அதிர்ஷ்டம் செய்தவர்களுக்குத்தான், அதுவாக இஷ்டப்பட்டு அதிர்ஷ்டம் வரும். அதிர்ஷ்டம் கட்டாயம் வரும்.

 24. வம்பு தும்புக்குப் போக வேண்டாம். சேதாரத்தைத் தவிர்க்கவும். மீறினால் மட்டும் மீறலாம் தப்பில்லை. அதுவும் சட்டப்பூர்வமாக.

 25. வெற்றியை தக்கவைத்துக்கொள்ள அரும்பாடு படவேண்டி இருக்கும்.

 26. சகோதரத்துடன் நல்லுறவை நாடுங்கள்.

 27. எடுத்த நற்பெயரைக் காப்பாற்றுங்கள்.

 28. போட்டி பந்தயத்தில் விட்டுப் பிடிக்கக் கூடாது. விட்டால், பிடிப்பது சிரமம்.

 29. பணத்தை ஈட்டித் தரும் முதலீட்டை பிரித்துப் பிரித்துப் போடுவது உத்தமம். வருவாய் பிரிந்து பிரிந்து வந்தாலும் பரவாயில்லை. அதுவே நிலைத்து நிற்கும்.

 30. தினம் தினம் செய்ய வேண்டிய செலவை கொஞ்ச கொஞ்சமாக செய்யுங்கள்.

 31. வெளிநாட்டினருடன் தொடர்பு ஏற்படும். அது சிறிது காலத்துக்கு மட்டுமே நிலைக்கும்.

 32. முயற்சியும், பயிற்சியும் கல்வியில் தேவை.

 33. றெக்க கட்டிப் பறக்கும் மனத்தைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். கட்டுப்படுத்தாதீர்கள்.

 34. மோதி விளையாடும் விளையாட்டால் எதிர்வினைகள் விளையும். விழிப்புணர்வுடன் இருங்கள்.

 35. நல்ல பழக்கங்களை, வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

 36. பணம் கொடுக்கல் வாங்கலை கட்டுப்படுத்துங்கள்.

 37. சகிபதி ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும்.

 38. கூட்டு, தனக்குத்தானே வைத்துக்கொள்ளும் வேட்டு.

பிரத்யேகப் பரிகாரம்

ஈம காரியங்களுக்குத் தன்னாலான உதவிகளை செய்துவந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

{pagination-pagination}

மகரம் (காலபுருஷ தத்துவப்படி 10-வது ராசி)

 1. பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும்.

 2. கொடுத்த வாக்கை எளிதாகக் காப்பாற்றலாம்.

 3. குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் யாவும் விலகும்.

 4. வலுவான ஒரு; களம் அமைக்க, கடுமையாகப் போராடவேண்டி இருக்கும்.

 5. மாற்று முறை சிகிச்சையால், உடல் உபாதைகள் படிப்படியாகக் குணமாகும்.

 6. பகையை வெல்ல, தக்க தருணம் வரும்.

 7. சந்தித்துவந்த எதிர்மறை நிகழ்வுகள் யாவும் விலகும்.

 8. புண்ணியத்தைச் சர்க்கும் நல்திட்டங்கள் யாவும், தடைகளுக்கும், விமரிசனங்களுக்கும் உட்பட்டு, இறுதியிலே சாத்தியமாகும்.

 9. ஒரு சிலருக்கு மூதாதையர்களின் வாழ்வாதாரம் அமையும். இது தொலைநோக்கில் ஆதாயமாக இருக்கும்.

 10. உதவித் தொகையுடன், மேற்கல்வி கற்க வாய்ப்பு உள்ளது.

 11. நெஞ்சில் துணிவும், உரமும் ஏற்படும்.

 12. வெளிநாடுகளில் பணிபுரிய மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும்.

 13. வேலைப் பளுவை குறைத்துக்கொள்ளுதல் நலம்.

 14. கோயில் குளம் போய்வர நேரத்தை ஒதுக்குவது நல்லது.

 15. அடைக்க வேண்டிய சொற்ப பாக்கிகளை அடைப்பதால், மனத்தில் கொஞ்சம் நிம்மதி ஏற்படும்.

 16. அவ்வப்போது மக்கர் செய்யும் பழைய வண்டி வாகனங்களை மாற்றுங்கள்.

 17. பூர்வீகச் சொத்துகள் நல்ல விலைக்கு விற்கப்படும்.

 18. புது வீடு கட்டுவதில் முனைப்பு காட்டுவீர்கள்.

 19. குழந்தை வேண்டுவோருக்கு, அச்செல்வம் இனி தங்கு தடையின்றி கிடைக்கும்.

 20. அறிவையும், சேவையையும் முதலீடாகக் கொண்டு ஜீவனம் புரிவோருக்கு, நீண்ட நிலைத்த திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு தேடி வரும்.

 21. சஞ்சலப்படும் மனத்தை ஒருமுகப்படுத்துங்கள்.

 22. திருமண வயதில் உள்ளோருக்கு, நல்ல இடத்தில், மனத்துக்குப் பிடித்த வரன் அமையும்.

 23. கணவன் – மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

 24. கூட்டு சர்ந்து ஜீவனம் செய்யும் திட்டம் இருப்பவர்களுக்கு, அவ்வெண்ணம் பலிதமாகும்.

 25. வண்டி வாகனத்தை இயக்கும்போது, கவனமும், நிதானப்போக்கும் கடைப்பிடிப்பது அவசியம்.

 26. கடின முயற்சியினாலேயே, எதை ஒன்றையும் நிறைவேற்றவேண்டி இருக்கும்.

 27. கௌரவப் பதவிகள் தேடிவந்தாலும், தவிர்த்துவிடுதல், தொலைநோக்குப் பார்வையில் நன்மை பயக்கும்.

 28. உடல்நலம் மற்றும் மனநலனில் தகுந்த அக்கறை செலுத்துதல் அவசியம்.

 29. கடல் கடந்த ஆதாயமும், விமானத்தில் அடிக்கடி பறக்கும் சந்தர்ப்பமும் கூடி வரும்.

 30. ஈட்டும் லாபத்தின் பெரும்பகுதியை, ஈட்டக் காரணமாக இருந்த விஷயங்களிலேயே மீண்டும் போட வேண்டிய சூழல் உருவாகும்.

 31. மற்றவர்களுடன் பழகும்போது, கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது பாதுகாப்பை தரும்.

 32. பொதுவாக, எந்த ஒரு விஷயத்திலும் பொறுத்திருந்து பலன் காணும் சூழல் அமையும்.

பிரத்யேகப் பரிகாரம்

வசதியில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு வேண்டிய உதவிகளைத் தொடர்ந்து செய்துவந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

{pagination-pagination}

கும்பம் (காலபுருஷ தத்துவப்படி 11-வது ராசி)

 1. முகம் தெளிவும் பொலிவும் பெறும். உடல் வலு கூடும்.

 2. இஷ்டப்பட்ட வசதிகளை எல்லாம் செய்துகொள்வீர்கள்.

 3. போட்டி, பந்தயத்தால் நல்ஆதாயம் உண்டு.

 4. கீர்த்தியும் புகழும் சேரும்.

 5. சமூக வலை விரியும்.

 6. தைரியமாகவும் நம்பிக்கையோடும் எதை ஒன்றையும் செய்வீர்கள்.

 7. கேளிக்கைகளில் பொழுதைப் போக்கி இன்புறுவீகள்.

 8. சொல்லிவைத்ததுபோல, அன்றாட நிகழ்வுகள் சுழற்சியாக நிகழும்.

 9. ஆரோக்கியம் சீர்படும். சித்த வைத்தியம் அனுகூலமாகும்.

 10. பூர்வீகச் சொத்து வந்து சேரும்.

 11. புத்திரப் பேறு கிடைக்கும்.

 12. எதிர்ப்பு விலகும். எதிரிகள் அஞ்சுவர்.

 13. ஆயுள் தீர்க்கமாகும்.

 14. உங்கள் காட்டில் நல்ல மழைதான் போங்கள்.

 15. கல்யாணக் கனவு நனவாகும்.

 16. தம்பதிகள் ஒற்றுமையுடன் இருப்பர்.

 17. ஆலயம் எழுப்புவீர்கள். தர்மங்கள் பல செய்வீர்கள்.

 18. மேற்கத்திய நாடுகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்வீர்கள்.

 19. கூட்டுத் தொழில் ஒத்துவரும். பங்கு போடும் அளவுக்கு லாபமும் பெருகும்.

 20. நிலம், வீடு போன்ற அசையா சொத்துகள் வாங்கிப் போடுங்கள். பிற்காலத்தில் பெரிதும் உதவும்.

 21. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

 22. பரிச்சயமானவற்றிலும், ஸ்திரமானவற்றிலும் முதலீடு செய்யுங்கள். தக்க பலன் காணலாம்.

 23. வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும்.

 24. பெரும் தொகையை கையில் வைத்துக்கொள்ள வேண்டாம்.

 25. அளந்து பேசுதல் வேண்டும்.

 26. புத்தியைத் தீட்ட, தினமும் ஒரு ஆட்டமேனும் சதுரங்கம் விளையாடுங்கள்.

 27. குடும்பத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. கோபப்படுதல் நல்லதல்ல.

 28. தொழிலில், எதிர்காலத்துக்கு வேண்டிய அஸ்திவாரத்தை தற்போதே கச்சிதமாக அமைத்துக்கொள்வது நலம்.

 29. தனிமனித ஒழுக்கம் பேணப்படுதல் வேண்டும்.

 30. பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தினமும் சேமியுங்கள். கஷ்ட காலங்களில் பெரிதும் உதவும்.

 31. வாழும் வீட்டை விரிவுபடுத்துவீர்கள் வசதி பெருகும்.

 32. தாயின் நலனில் ஒரு கண் இருக்கட்டும்.

 33. தந்தையின் உடல் நலன் கட்டுப்பாட்டில் இருக்கும்.

 34. மோட்டார் வாகனத்தை இயக்கும்போது, எண்ணச் சிதறல்கள் கூடாது. மற்ற வாகனங்களை முந்திச் செல்லும்போதும், வளைவு நெளிவுகளிலும், மேடு பள்ளங்களிலும், அவசரப்போக்கை தவிர்த்தல் வேண்டும்.

 35. அல்லல்படும் மனத்தை அங்கும் இங்கும் அலையவிடாதீர்கள். ஒருமுகப்படுத்துங்கள்.

 36. மாணவர்கள், வீணானவற்றில் நேரத்தைக் கழித்தல் ஆகாது. நேரம் காலம் போனால் போனதுதான். மறுபடியும் வராது.

 37. விளையாட்டு வீரர்களுக்கு, ஊக்கத்தொகையுடன், பரிசும் பாராட்டுப் பத்திரமும் கிடைக்கும்.

 38. குலதெய்வத்தை, சொந்தபந்தங்களுடன் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் வாய்க்கும்.

 39. நல்ல சகவாசம் வைத்துக்கொள்ளுங்கள்.

 1. கடன், கட்டுக்கடங்கி இருக்கும்.

பிரத்யேகப் பரிகாரம்

பால்வாடி அங்கன்வாடி குழந்தைகளுக்குப் பால் பழங்களையும், காய்கறிகளையும் தினமும் தவறாமல் வழங்கிவந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

{pagination-pagination}

மீனம் (காலபுருஷ தத்துவப்படி 12-வது ராசி)

 1. தொடர் ஒப்பந்தங்கள் மூலம், வருவாய்ப் பெருக்கத்துக்கு வழி பிறக்கும்.

 2. பணம் சம்பாதிக்க, உலகத்தின் எந்த மூலைக்கும் பறக்கத் தயங்கமாட்டீர்கள்.

 3. குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வனே செய்து ஆனந்தம் அடைவீர்கள்.

 4. உடன்பிறந்தோருக்குப் பக்கபலமாக இருங்கள்.

 5. செய்த புண்ணியத்தால் கஷ்டம் தீரும்.

 6. ஆன்மிகம் பிடிக்கும்.

 7. பாட்டன் பூட்டன் சொத்து வந்து சேரும்.

 8. குலதெய்வம் கைகொடுக்கும்.

 9. வீட்டில் மழலை மொழி கேட்கும்.

 10. நித்யகண்டம், பூர்ண ஆயுசு.

 11. வேலைப்பளு அதிகமாவதால், கடுமையாக உழைக்க நேரிடும்.

 12. வேண்டாத சகவாசத்தை விட்டுவிடுதல் நல்லது.

 13. வாழ்க்கையின் மெய்ப்பொருளை அறிந்தவர்களின் தொடர்பு கிடைக்கும்.

 14. திட்டமிட்டுச் செயல்பட்டு, வீண் அலைச்சல்களைத் தவிர்க்கவும்.

 15. சொத்து சுகம் விஷயங்களில் மாற்றங்கள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

 16. தாயின் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

 17. வண்டி வாகனத்தைப் பழுது பார்த்து, நல்ல நிலையில் வைத்திருங்கள்.

 18. வாழும் வாழ்க்கையின் மீது நம்பிக்கை வையுங்கள்.

 19. இஷ்டப்பட்டு படித்து, நாலு விஷயத்தை தெரிந்துகொண்டு, கல்வியில் மேன்மை அடையுங்கள்.

 20. கட்டிய மனைவியையோ, கைப்பிடித்த கணவனையோ காதலிக்க நேரமில்லாததுபோல் நடந்துகொள்ளாதீர்கள்.

 21. யாருடனும் கூட்டு சேர்ந்து பொருள் ஈட்டும் எண்ணம் வேண்டவே வேண்டாம்.

 22. உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பின்விளைவுகளில் இருந்து, முன்னெச்சரிக்கையோடு தப்பித்துக்கொள்ளலாம்.

 23. காசு, பணம் எண்ணி செலவு செய்யுங்கள். கடலிலே போட்டாலும்கூட அளந்து போடுவதுதான் உத்தமம்.

 24. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்போல, அதிலுள்ள அனுபவப் பாடங்களை சரிவர புரிந்துகொண்டால்தான் பட்டம் பெற முடியும்.

 25. யாரிடமும், எதையும் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம்.

 26. அவ்வப்போது மனத்தை ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள். தெம்பு கிடைக்கும்.

 27. பகை விலக, பகைவர்களிடமிருந்து விலகி நிற்கவும். அத்துமீறிய வம்பையோ, வழக்கையோ நீதிமன்றத்தில் சந்திக்கலாம்.

 28. நிறைந்த கடன் மறைந்திருக்கும். மேலும் மேலும் கடனைச் சேர்க்க வேண்டாம்.

 29. நடைமுறைக்கு ஒத்துவராத திட்டங்களைக் கைவிடுவீர்கள்.

 30. வண்டி வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம்.

 31. தந்தையின் உடல் நலனில் முன்னேற்றம் உண்டு.

 32. குடும்பத்தினருடன் நீண்டதூரப் பயணம் சென்று வருவீர்கள்.

 33. உயர்கல்வி யோகம் வெளிநாடுகளில் வாய்க்கும்.

 34. எதிலொன்றிலும் மறைந்திருந்து, பொறுத்திருந்து செயல்பட்டால் பலன் நிச்சயம்.

 35. எடுத்த பெயரைக் காப்பாற்ற முயற்சி செய்வீர்கள்.

 36. கல்யாணச் செலவை தடபுடலாகச் செய்து மகிழ்வீர்கள்.

 37. கடன்களை பாக்கி இல்லாமல் அடைப்பது உத்தமம்.

பிரத்யேகப் பரிகாரம்

கர்மவினையால் கடன்பட்டவர்களுக்கு உபகாரமாக இருந்துவந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.