“இலங்கைக்கு எதிரான முதல் டி20: 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி”

0
317

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த இந்திய அணி வீரர்கள் ராகுல், 48 பந்துகளில்  61 ரன்கள் விளாசினார். கேப்டன் ரோஹித் ஷர்மா 17, ஷ்ரேயாஸ் ஐயர் 24, தோனி39,  பாண்டே 32 ரன்கள் எடுத்தனர்.

இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து இரண்டாவதாக பேட் செய்த இலங்கை அணி வீரர்கள் டிக்வெல்லா 13, தரங்க 23,  மாத்யூஸ் 1 , குணரத்னே 4 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தனர்.

இந்த போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது பெற்றது.
இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட போட்டியில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.