திருமணத்திற்கு பின்பு முதல் பேட்டி.., நமீதா, வீர் தம்பதி..! – (வீடியோ)

0
393

நடிகை நமீதா திருமணத்திற்கு பிறகு முதன் முதலில் அவரது கணவருடன் ஒரு பேட்டியளித்துள்ளார்.

அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் காதலிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

நமீதா பிக் பாஸ் வீட்டிற்கு கிளம்பும்போது அவரது வீட்டில் வளரும் மூன்று நாய்களையும் வீர் தான் பாத்துக்கொண்டாராம்.

மேலும், இருவரும் நெருங்கிய நண்பர்கள் எனவும். திருமண பேச்சு ஆரம்பித்தபோது தான் நமீதா 65 வயது தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்ய போகிறார் என்ற செய்து வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை நமீதா கேட்டதும் சிரிச்சுட்டு விட்டுவிட்டாராம். ஆனால் வீர்ரிக்கு மிகுந்த கோபம் வந்துள்ளது.

இந்த மாதிரியான பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என்று நமீதாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நமீதாவோ இதை கண்டுகொள்ள வேண்டாம் என்று வீர்ரை சமாதானம் செய்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் நன்கு புரிந்து வைத்துக்கொண்டுள்ளார்கள். வீர் கிடைத்ததிற்கு நமீதா கடவுளுக்கு நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.