“அமெரிக்காவில் தொடரூந்து தடம் புரண்டதில் 6 பேர் பலி!”

0
849

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஆம்ட்ராக் தொடரூந்து (The Amtrak) பெட்டிகள் சாலையில் கவிழ்ந்து விழுந்ததால் 6 பேர் பலியாகி உள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்ல் ஆம்ட்ராக் தொடரூந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஆம்ட்ராக் என்பது அமெரிக்காவில் பொது நிதியில் இயக்கப்படும் ஒரு தொடரூந்து நிறுவனம்.

சியாட்டில் பகுதியில் இருந்து போட்ர்லாண்ட் பகுதிக்கு நேற்று ஆம்ட்ராக் தொடரூந்து சென்று கொண்டிருந்தது. அந்த தொடரூந்தில் 75 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களும் பயணம் செய்தனர்.

சியாட்டிலில் இருந்து புறப்பட்ட சிறிது தொலைவில் ஆம்ட்ராக் புகையிரத் ஒரு பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த தொடரூந்து திடீரென தடம் புரண்டது.

இந்த விபத்தில் தொடரூந்தின் 5 பெட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விழுந்தன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்து சென்றனர். தடம் புரண்ட தொடரூந்து பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் தொடரூந்து தடம் புரண்ட விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாக முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது.

மேலும் படுகாயம் அடைந்து தொடரூந்து பெட்டிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து வருகிறோம். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

476F415E00000578-5191431-Injuries_and_casualties_have_been_reported_after_a_Amtrak_train_-a-57_1513619571330476F785000000578-5191431-image-a-85_15136206751514770895400000578-5191431-image-a-11_15136457465864770848300000578-5191431-image-a-13_1513645798250

476FA99E00000578-5191431-image-a-102_1513625519192

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.