புளொட்டின் முன்னாள் உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு- (படங்கள், வீடியோ)

0
313

 

புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் மகசின்கள், ரவைகள் மற்றும் வாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

image_dce10da253அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவரது வீட்டில் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வசித்து வருவதாகவும், அவர் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளமையை அடுத்து வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற பொலிஸார் சென்று, அங்குள்ள பொருள்களை அகற்றும் போது அலுமாரி ஒன்றுக்குள் ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2 396 ரவைகள், கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.

அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் கைது செய்யப்பட்டு, . அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் மேலும் கூறினர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90625.0.560.320.160.600.053.800.700.160.901

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.