ஆங் சாங் சூச்சி மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்படுமா?

0
870

ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் என சையத் ராவுத் அல் ஹுசைன், ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்களுக்கு காரணமானவர்கள், நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மியான்மரின் மக்கள் தலைவரான ஆங் சாங் சூச்சி மற்றும், ஆயுதப்பிரிவு தலைவரான ஜெனரல் ஆங் மின் ஹிலைங் ஆகியோர், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை வருங்காலத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் அவர் மறுக்கவில்லை.

நடந்துள்ள ராணுவ செயல்பாடுகளைப் பார்க்கும்போது, இந்த முடிவுகள் மேல்மட்டத்தில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் வாழ்ந்த ரோகின்சாமுஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட, கொடூர தாக்குதல்கள் குறித்த சர்வதேச குற்றவியல் விசாரணைக்காக அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

டிசம்பர் மாதத்தின ஆரம்பத்தில் ராணுவத்தின் தாக்குதலை தொடர்ந்து, 6.5 லட்சம் மக்கள் மியான்மரிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும் நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

அத்துமீறல்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கொலை, வன்புணர்வு என பல விஷயங்களை அங்கு பிரச்சனை தொடங்கியபோதிலிருந்தே இடம்பெற்றுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

imageproxy.php2017-09-14T235738Z_1690778053_RC1654CA39B0_RTRMADP_3_MYANMAR-ROHINGYA-BANGLADESH-960x576

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.