பாதசாரிகள் கடவையில் விபத்து: பரீட்சைக்கு சென்ற மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!! (வீடியோ)

0
386

நாட்டில் மஞ்சள் நிறமாக காணப்பட்ட பாதசாரிகள் கடவை அண்மையில் வௌ்ளை நிறமாக மாற்றப்பட்டது.

ஆசிரியர்களின் ஆசீர்வாதத்தைப்பெற்று சாதாரண தரப்பரீட்சைக்கு புறப்பட்டுச் சென்ற இரண்டு மாணவிகள் இன்று பாதசாரிகள் கடவையில் விபத்திற்குள்ளான சம்பவமொன்று பதிவானது.

பதுளை கவரங்ஹேன மற்றும் இழுக்கும்புர பிரதேசங்களைச் சேரந்த இந்த இரண்டு மாணவிகளும் பதுளை, கொழும்பு பிரதான வீதியில் கவரங்ஹேன சந்தியில் விபத்திற்குள்ளாகினர்.

உரியமுறையில் எவ்வித குழப்பமுமின்றி இந்த இரண்டு மாணவிகளும் பாதசாரிகள் கடவையில் வீதியை கடந்தாலும் வீதி ஒழுங்கை மீறி செயற்பட்ட சாரதியின் செயற்பாட்டினால் இவர்கள் அனர்த்தத்தை எதிர்நோக்கினர்.

அருகில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கமராவில் இந்தக் காட்சி இவ்வாறு பதிவாகியிருந்தது.

காயமடைந்த இரண்டு மாணவிகளும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருந்தமையால் அவர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அல்லேபொல மகாவித்தியாலயத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதப் பாடத்திற்கு தோற்றுவதற்காக சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.