கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவை துரத்தி அடித்த மக்கள்!

0
718

கோண்டாவில் பகுதியில் சாகசம் காட்ட முற்பட்ட வாள்வெட்டு குழுவினரை அப்பகுதி மக்கள் துரத்தி துரத்தி அடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அத்துடன் அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய பொதுமக்கள் கோப்பாய் பொஸிசிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாகவும் இதன்காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

கோண்டாவில் குட்சட் வீதி பகுதியில் சற்று முன்னர் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த வாள்வெட்டு குழுவினர் அப்பகுதி மக்களை அச்சுறுத்த முற்பட்டுள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஊர் இளைஞர்கள் ஒன்று திரண்டு இவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதை சற்றும் எதிர் பார்க்காது செய்வதறியாது திகைத்த வாள்வெட்டு குழுவினர் ஆயுதங்களை போட்டு விட்டு சிதறி ஓடியுள்ளனர்.

அவர்களிடம் இருந்த இரண்டு வாள்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை கோப்பாய் பொலிஸாரிடம் பொதுமக்கள் பாரப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.