சபரிமலை ஐயப்பன் கோவில் 18 படிகளில் உள்ள தெய்வங்கள்

0
287

சபரிமலையில் படிபூஜை சிறந்த முறையில் செய்யப்படுகிறது. 18 படிகளில் உள்ள தெய்வங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சபரிமலையில் படிபூஜை சிறந்த முறையில் செய்யப்படுகிறது. 18 படிகளை பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றுக்கு கீழே 18-ம்படி ஏறும் இடத்தில் பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படிபூஜை செய்வார்.
ஒவ்வொரு படியிலும் படி பூஜையும், மூர்த்தி பூஜையும் நடத்துவார். பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும்.
தேங்காயை இரண்டாக உடைத்து அந்த மூடியில் நெய்விளக்கு ஏற்றி தீபம் காண்பிப்பார். 18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நைவேத்தியம் நடைபெற்ற பிறகு பிரசன்ன பூஜை செய்வார்.
பிறகு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காண்பிப்பார். இதற்கு பிறகு பிரதான தந்திரியும், மேல்சாந்தியும் மற்றும் சில குறிப்பிட்ட பக்தர்களும், படியேறிச் செல்வார்கள். பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப்பாயாசம் நைவேத்தியம் செய்து தீபம் காண்பிப்பார்கள்.
18 படிகளின் தெய்வங்கள் :
ஒன்றாம் திருப்படி- சூரியன்
இரண்டாம் திருப்படி- சிவன்
மூன்றாம் திருப்படி- சந்திரன்
நான்காம் திருப்படி- பராசக்தி
ஐந்தாம் திருப்படி- செவ்வாய்
ஆறாம் திருப்படி- முருகன்
ஏழாம் திருப்படி- புதன்
எட்டாம் திருப்படி- விஷ்ணு
ஒன்பதாம் திருப்படி- குரு
பத்தாம் திருப்படி- பிரம்மா
பதினோராம் திருப்படி- சுக்கிரன்
பனிரெண்டாம் திருப்படி – லட்சுமி
பதிமூன்றாம் திருப்படி- சனீஸ்வரர்
பதினான்காம் திருப்படி- எமன்
பதினைந்தாம் திருப்படி- ராகு
பதினாறாம் திருப்படி- சரஸ்வதி
பதினேழாம் திருப்படி- கேது
பதினெட்டாம் திருப்படி- விநாயகர்
இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் உள்ளது. அதாவது ஒற்றைபடை வரிசையில் நவக்கிரகங்களும், இரட்டை படை வரிசையில் தெய்வ குடும்பமும் இருப்பதாக ஐதீகம்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.