‘இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா!: வெற்றி இலக்கு 393!!

0
370

இந்திய அணி 2 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 393 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி மொகாலியில் இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 392 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது  208 ஓட்டங்களயும் தவான் 68 ஓட்டங்களையும் ஐயர்  88 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதில் , இந்திய அணி சார்பில் அதிரடியாக விளையாடிய இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா தனது மூன்றாவது ஒருநாள் இரட்டைச் சதத்தை பதிவு செய்தார்.

அவர் 153 பந்துகளை எதிர்க்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள் மற்றும் 12 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் 208 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டார்.

இதன் மூலம் , ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா பெற்றுள்ள இரண்டாவது இரட்டைச் சதம் இதுவென்பது சிறப்பம்சமாகும்.

பந்து வீச்சிற்கு இலங்கை அணியின் 7 பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இதில் , இலங்கை அணித்தலைவர் திசர பெரேரா 8 ஓவரக்ள் பந்து வீசி 80 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

சசித் பதிரண ஒரு விக்கட்டை கைப்பற்றினார்.

10 ஓவர்கள் பந்து வீசிய நுவன் பிரதீப் இந்த போட்டியில் 106 ஓட்டங்களை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப் போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றவேண்டுமாக இருந்தால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 393 ஓட்டங்களைப் பெறவேணடும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.