நுளம்பு வலை போட்டு படுக்கச் சொன்னதால் துாக்கில் தொங்கிய மாணவி!!: யாழில் சம்பவம்!!

0
1284

ஜி.சி.ஈ. உயர்­த­ரத்­தில் பயி­லும் மாணவி ஒரு­வர் தூக்­கில் தொங்­கிய நிலை­யில் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்கப்பட்டபோதும் கொண்­டு­செல்­லும் வழி­யில் அவர் உயி­ரி­ழந்­து­விட்­டார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் ஆனைக்­கோட்­டை­யில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றது. இதே இடத்­தைச் சேர்ந்த ம.தர்­சிகா (வயது – 18) என்­ப­வரே இவ்­வாறு

உயி­ரி­ழந்­தார்.சண்­டி­லிப்­பா­யி­லுள்ள பாட­சாலை ஒன்­றில் இவர் கற்­கி­றார். பதின்ம வய­து­டைய இவ­ரது இறப்­புக்­கான கார­ணம் அவருக்­கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்­கும் இடை­யி­லான தனிப்­பட்ட விவ­கா­ர­மாக இருக்­கி­றது.

“நுளம்­புச் சீலை கட்­டி­விட்டு உறங்­கு­மாறு பெற்­றோர் மாண­விக்­குக் கூறி­யுள்­ள­னர் என்­றும் மாணவி அவ்­வாறு செய்­ய­வில்லை என்றும் அத­னால் பெற்­றோர் மாண­விக்கு

அடித்­த­னர் என்­றும் அத­னா­லேயே மாணவி அவ்­வாறு முடி­வெ­டுத்­தார்” என்று இறப்பு விசா­ர­ணை­யின் பின்­னர் இறப்­புக்­கான கார­ணம் தெரி­விக்­கப்­பட்­டது.

அவ­ரது வீட்டு அறை­யில் குறித்த மாணவி தூக்­கில் தொங்­கி­ய­போது வீட்­டுக்­கா­ரர் அவரை மீட்டு உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர். அங்கு பரி­சோ­தனை மேற்­கொண்­ட­போது அவர் அதற்கு முன்­னரே உயி­ரி­ழந்­து­விட்­டமை தெரி­ய­வந்­தது.

பொலி­ஸார் மற்­றும் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் இறப்பு விசா­ரணை மேற்­கொண்­ட­னர். சட­லம் நேற்­றுப் பெற்­றோ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.