கவர்ச்சி உடையில் கலக்கிய ஐஸ்வர்யாராய்

0
182

சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யாராய் கவர்ச்சி உடை அணிந்து வந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்,1997-ல் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆனார். மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் ‌ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்துடன் ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்தார். இதில் 2 வேடங்களில் வித்தியாசமாக தோன்றி தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தார்.

இதையடுத்து இந்திபட உலகில் முன்னணி நடிகையானார். அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

என்றாலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஐஸ்வர்யாராய்க்கு வயது 44. இந்த வயதிலும் படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

61997155.cmsஇவர் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் விதம்விதமாக கவர்ச்சி உடை அணிந்து சென்று அனைவர் பார்வையும் தன் மீது விழச் செய்கிறார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொண்டு அசத்தினார்.

இதில், அவர் அணிந்து இருந்த ‘டக்சிடோ’ என்ற அந்த நவீன கவுன் விலை ரூ.3 லட்சத்து 74 ஆயிரம்.

அலெக்சில் மாபிலே என்ற ஆடை வடிவமைப்பாளர் இதை வடிவமைத்து கொடுத்துள்ளார்.

ஐஸ்வர்யாராய் கவர்ச்சி உடையுடன் வந்த அந்த புகைப்படம் இணையதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

aish41512822553

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.