ஜார்கண்ட் மாநிலத்தில் முத்தமிடும் போட்டியால் சர்ச்சை!! – (வீடியோ)

0
684

ஜார்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தில் உள்ள ஜூமாரியா என்ற கிராமத்தில் கலாசார விழா நடைபெற்ற போது, பழங்குடியின தம்பதிகள் முத்தமிடும் போட்டி நடத்தப்பட்டது.

போட்டி நடைபெறும் போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ.க்களான சைமன் மராண்டி, ஸ்டீபன் மராண்டி ஆகியோர் அங்கு இருந்தனர். அவர்கள்தான் முத்த போட்டிக்கு ஏற்பாடு செய்ததாக தகவல் வெளியானது.

போட்டியின் போது தம்பதிகள் முத்தமிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் கலாசார சீரழிவு என்று கூறியுள்ள ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதா கட்சி, அந்த எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது.

இதுபற்றி சைமன் மராண்டி கூறுகையில், பழங்குடியின மக்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாகவும், அதை தடுக்கும் நோக்கத்தில் இந்த முத்த போட்டிக்கு ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார். என்றாலும் எதிர்ப்பு ஓயவில்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.