யாழ். பொலிஸ் வரலாற்றில் பாரிய தொகை ​திருட்டு

0
330

யாழ்ப்பாணம் – றக்கா வீதியில் உள்ள நிதி நிறுவனத்தின் இரும்பு பாதுகாப்பு பெட்டகத்தின் திறப்பைக் கொண்டு திறந்த திருடர்கள் 10.7 மில்லியன் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திருட்டுச் சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (03) இரவு 11 மணிக்கும் நேற்று (04) அதிகாலை 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளது.

வரலாற்றில் இவ்வாறு பாரிய தொகை பணம் திருடப்பட்ட சம்பவம் இதுவே முதல் தடவையென, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நிதி நிறுவனத்தின் பின் பக்க கதவை உடைத்த திருடர்கள், அங்கிருந்த சி.சி.ரி.வி கமெராவின் தொடர்புகளை முதலில் துண்டித்துள்ளனர்.

பின்னர், வங்கியில் இருந்த இரும்பு பெட்டகத்தின் சாவியை எடுத்து திறந்து அதில் இருந்த பணத்தைச் திருடி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என, பொலிஸார் தெரிவித்தனர்.

மன்றுக்கு அழைத்துவரப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

ooddamவவுனியா சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் இருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம், இன்று (05) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சான்றுப் பொருட்கள் அறையை உடைத்து, கஞ்சா திருடியக் குற்றச்சாட்டில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவரில் இருவரே, இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.

எனினும், 2 மணிநேர தேடுதலின் பின்னர், அவர்கள் இருவரையும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மீளவும் கைதுசெய்துள்ளனர்.

இதன்பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேகநபர்கள் மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, மூவருக்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வழங்கப்படும் என, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அறிவித்தார்.

அதுவரை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.