வலி இல்லாமல் உயிரைப் பிரிக்கும் தற்கொலை இயந்திரம்

0
445

ஒரு பட்டனை அழுத்தினாலே சில நிமிடங்களில் வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடும் தற்கொலை இயந்திரம் ஒன்றை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் டொக்டர் பிலிப் நிட்ச்கே அறிமுகப்படுத்தியுள்ளார்.

பிலிப் நிட்ச்கே அறிமுகப்படுத்தியுள்ள இந்த இயந்திரத்தை நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு பொறியியலாளர் வடிவமைத்துள்ளார்.

இந்த தற்கொலை இயந்திரத்திற்கு “தி சார்கோ கேப்சியூல்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதலாவதாக நம் மன நிலையை சோதிக்கும் விதமான சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்தாக வேண்டும்.

அதன் முடிவில் நான்கு இலக்க எண் தரப்படும், அதைப் பயன்படுத்தி இயந்திரத்தின் வகையைப் பதிவிறக்கம் செய்து அதை 3டி பிரிண்டரில் பிரிண்ட் செய்து பயன்படுத்தலாம்.

தற்கொலை செய்யப்போகும் ஒருவர் இயந்திரத்தில் அமர்ந்து ஒரு பட்டனை அழுதியதும் நீர்ம நிலையில் உள்ள நைட்ரஜன் வாயு ஆக்ஸிஜன் அளவை குறைத்து சில நிமிடங்களில் வலி இல்லாமல் மரணத்தை தழுவச் செய்யும்.

suicudeஇதுகுறித்து டொக்டர் பிலிப்,

“சார்கோ இயந்திரத்தில் தடை செய்யப்பட்ட எந்த ஒரு போதைப்பொருளும் பயன்படுத்தப்படவில்லை.

இதைபயன்படுத்த நிபுணர்கள் யாரும் தேவையில்லை. கேள்விகளுக்கு சரியாக பதிலளிப்பவர் யாராக இருந்தாலும் சார்கோ இயந்திரத்தைப்பயன்படுத்தி சட்ட ரீதியாக அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்ளலாம்” என கூறியுள்ளார்

இயந்திரத்தின் மேல் பகுதியை தனியாக பிரித்து எடுத்து சவப்பெட்டியாகவும் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாகவுள்ளமை இதன் சிறப்பம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.