நாசா விஞ்ஞானிகள் விண்வெளியில் பீசா செய்து சாப்பிட்ட வைரல் வீடியோ

0
196

நாசா விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி மையத்தில் பீசா செய்து சாப்பிட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

விண்வெளி விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். புவி ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் அவர்கள் விண்வெளி மையத்தில் வாழும் முறையைப் பற்றி நாசா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், விண்வெளி மையத்தில் தங்கியுள்ள வீரர்கள் அங்கே பீசா செய்து அதைச் சாப்பிடும் வீடியோவை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. மிதந்து கொண்டிருக்கும் பீசாவில் எல்லாப் பொருட்களையும் சேர்த்து அதை சுடவைத்து பின்னர் அதைச் சாப்பிட்டுள்ளனர்.

விண்வெளி வீரர்களின் இந்த வித்தியாசமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.